மேக்ஸ்வெல்லின் அதிரடியில் வீழ்ந்தது இந்தியா….!!
- இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயாக போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 190 ரன்கள் அடித்தது.
- ஆஸ்திரேலியா அணியின் மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை வென்றது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியாவின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.
லோகேஷ் ராகுல் சரவெடியாக வெடித்து, அவர் 26 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்த போது தனது விக்கெட்டை இழந்தார்.தவான் கடுமையாக போராடி 24 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த ரிஷப் பண்ட் ஆறு பந்துகளுக்கு ஒரு ரன் எடுத்து வெளியேறினார்.
இதன் பின்னர் இந்திய அணி 20 ஒவர்களின் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் அடித்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 72* ரன்கள் அடித்தார்.தோனி 40 ரன்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தார் . இதன் பின்னர் 191 ரன்களை இலக்காக கொண்டு ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.
இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி ரன் குவித்தது. மேலும் அந்த அணியின் தொடக்க வீரர் ஷார்ட் 28 பந்துகளில் 40 ரன் குவித்து சிறப்பான தொடக்கத்தை அமைத்தார். ஆஸ்திரேலிய அணி 19.04 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது. அதிகபட்சமாக அந்த அணியின் மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.