வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி : பாகிஸ்தான் அணியின் சாதனையை சமன் செய்த இந்தியா !

Default Image

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நேற்று முதல்  டி -20 போட்டியை புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் விளையாடியது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்து உள்ளது.

முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்க வீரர்களாக ஜான் காம்ப்பெல், எவின் லூயிஸ் இருவரும் களமிறங்கின. ஆட்டம் தொடக்கத்திலே எவின் லூயிஸ் ,  ஜான் காம்ப்பெல் இருவரும்  ரன்கள் எடுக்காமல் வெளியேறினார்.

Image

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி  திணறியது.பிறகு இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை  இழந்து  95 ரன்கள் எடுத்தது.

96 ரன்கள் இலக்குடன் இறங்கிய இந்திய அணி ரோஹித் (24) , விராட் (19) , மனீஷ் பாண்டே (19) ஆகியோரின் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி 17.2 ஓவரில் இந்திய அணி 98 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி  வெற்றி பெற்றது.

Image

இதன் மூலம் அந்நிய மண்ணில் இந்திய அணி 50 முறையாக வெற்றி பெற்று உள்ளது .இந்த சாதனையை இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் பகிர்ந்து உள்ளது. இந்திய  அணி இதுவரை விளையாடிய 116 டி 20 போட்டிகளில் 71 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது.

பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடிய 143 டி 20 போட்டிகளில் 90 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது.இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அந்நிய மண்ணில் அதிக முறை வெற்றி பெற்ற அணி என்ற புதிய சாதனையை படைக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
vaikunda ekathasi (1)
ponmudi dmk
mk stalin ABOUT tn
tvk vijay
deepika padukone l & k
Stalin's announcement Prison sentence