நாளை இந்தியா இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது.
ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் அக்-16 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. தகுதிச்சுற்று போட்டிகளுடன் ஆரம்பித்து சூப்பர்-12 போட்டிகள் நிறைவு பெற்று நாக் அவுட் போட்டிகள் இன்று தொடங்க இருக்கிறது.
சிட்னியில் இன்று முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. நாளை அடிலெய்டில் இரண்டாவது அரையிறுதிப்போட்டி நடைபெறுகிறது, இதில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது.
இந்த போட்டியை முன்னிட்டு நேற்று வலைப்பயிற்சியின் போது கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு பந்து கையில் பட்டு காயமடைந்தார், சில நேரங்களுக்கு பிறகு மீண்டும் ரோஹித் சர்மா பயிற்சியை தொடர்ந்தார். இது குறித்து ரோஹித் சர்மா கூறியதாவது, காயம் தற்போது நன்கு குணமடைந்துள்ளது.
மேலும் நாளை அரையிறுதியில் இங்கிலாந்திற்கு எதிராக களமிறங்கவுள்ள இந்திய அணி ஏற்கனவே இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியிருப்பதால் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது மீண்டும் அதை செய்து காட்டுவோம் என்று கூறியுள்ளார்.
சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி வருகிறார், அவர் சிறிய மைதானங்களை விட பெரிய மைதானங்களில் விளையாடுவதை விரும்புகிறார், சிறிய மைதானங்களில் அவரால் இடைவெளியை(Gap) கவனிக்க முடிவதில்லை, சூர்யகுமாருக்கு (SKY IS THE LIMIT FOR HIM) வானமே எல்லை.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…