U-19 உலகக்கோப்பை: இந்தியா – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை-மகுடம் சூடப்போவது யார்?..!

Default Image

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது. 

U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது.அந்த வகையில்,பிப்.2 ஆம் தேதி நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா -இந்தியா மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழந்து 290 ரன்கள் எடுத்தது.இதனால், 291 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 41.5 ஓவர் முடிவிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 194 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால்,96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.இந்நிலையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் இந்தியா- இங்கிலாந்து மோதுகிறது.இப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6:30 மணிக்கு தொடங்குகிறது.

2016-ம் ஆண்டிலிருந்து இந்தியா தொடர்ந்து நான்காவது முறையாக  இறுதிப் போட்டி வந்துள்ளது. ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இந்திய அணி பெற்றுள்ளது. இந்தியா 2000, 2008, 2012 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்றுள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பையை இங்கிலாந்து அணி ஒரு முறை வென்றுள்ளது.1998-ஆம் ஆண்டு இறுதி போட்டியில் நியூஸிலாந்து உடன் இங்கிலாந்து மோதியது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.அதன் பிறகு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை தொடரில்  இங்கிலாந்து இறுதிப்போட்டிக்கு சென்றது இல்லை.இந்த வருடம் தான் இங்கிலாந்து இறுதிப்போட்டி வந்துள்ளது.

இறுதிப்போட்டியை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் தீவிரமாக இருப்பதால் இன்று போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணிகள்:

சாத்தியமான இந்திய U19 அணி:அங்கிரிஷ் ரகுவன்ஷி,ஹர்னூர் சிங்,ஷேக் ரஷீத், யாஷ் துல்(c),ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்,நிஷாந்த் சிந்து,தினேஷ் பனா(w),ராஜ் பாவா, கவுஷல் தம்பே,விக்கி ஓஸ்ட்வால்,ரவி குமார்,மானவ் பராக்,சித்தார்த் யாதவ்,அனி கௌதம், கர்வ் சங்வான்.

சாத்தியமான இங்கிலாந்து U19 அணி: ஜார்ஜ் தாமஸ்,ஜேக்கப் பெத்தேல்,டாம் ப்ரெஸ்ட்(c),ஜேம்ஸ் ரெவ்,வில்லியம் லக்ஸ்டன்,ஜார்ஜ் பெல்,அலெக்ஸ் ஹார்டன்(w), ரெஹான் அகமது,ஜேம்ஸ் சேல்ஸ்,தாமஸ் ஆஸ்பின்வால்,ஜோசுவா பாய்டன்,ஜேம்ஸ் கோல்ஸ்,ஃபதே சிங்,நாதன் பார்ன்வெல்,பெஞ்சமின் கிளிஃப்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்