இந்தியா- இங்கிலாந்து 3-வது டெஸ்ட் போட்டி இன்னும் சிறிது நேரத்தில் தொடங்குகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளிடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.அதன்படி,நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனது.
இதனையடுத்து,லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.இதனால்,தற்போது இந்தியா 1-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில்,இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில்,இன்று 3.30 மணிக்கு தொடங்குகிறது.அதன்படி,டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். மேலும்,2-வது டெஸ்டில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி,வருகின்ற மூன்று டெஸ்டுகளிலும் வென்று இத்தொடரைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா லெவன்: ஆர் ஷர்மா, கேஎல் ராகுல், சி புஜாரா, வி கோஹ்லி, ஏ ரஹானே, ஆர் பந்த், ஆர் ஜடேஜா, ஐ ஷர்மா, எம் ஷமி, ஜே பும்ரா, எம் சிராஜ்.
இங்கிலாந்து லெவன்: ஆர் பர்ன்ஸ், எச் ஹமீட், டி மாலன், ஜே ரூட், ஜே பெர்ஸ்டோ, ஜே பட்லர், எம் அலி, எஸ் கர்ரன், சி ஓவர்டன், ஓ ராபின்சன், ஜே ஆண்டர்சன்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…