இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்றுநடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் பின்ச், டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர். சிறப்பான கூட்டணி அமைத்த இந்த ஜோடியில் பின்ச் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து சிறப்பாக விளையாடி வந்த வார்னர் அரைசதம் அடித்து 83 ரன்களில் ரன் -அவுட்டாகி வெளியேறினார். பின்னர், ஸ்மித் ஒருபுறம் அதிரடியாக விளையாட அவருக்கு மர்னஸ் நிதானமாக விளையாடி கூட்டணி கொடுத்தார். அதிரடியாக ஆடிய ஸ்மித் 104 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியாக ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டை இழந்து 50 ஓவரில் 389 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 390 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், தவான் இருவரும் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே தவான் 30 ரன்களில் வெளியேற, பின்னர் ஸ்ரேயாஸ் களமிறங்கினர். நிதானமாக விளையாடி வந்த அகர்வால் 28 ரன்னில் வெளியேற இதையெடுத்து, இந்திய அணியின் கேப்டன் கோலி களமிறங்கினார். ஸ்ரேயாஸ் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் அவர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 38 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர், விகெட் கீப்பர் கே.எல் ராகுல் களமிறங்க கோலியுடன் ராகுல் கைகோர்த்து அணியின் எண்ணிக்கை சற்று உயர்த்தினர். இவர்களின் கூட்டணி மூலம் இந்திய அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. அதிரடியாக விளையாடி வந்த கோலி சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 89 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து கே.எல் ராகுல் 76 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
பின்னர்,களம்கண்ட ஹர்திக் 28, ஜடேஜா 24 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் மட்டுமே எடுத்தனர், இதனால் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி வருகின்ற 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…