முக்கியச் செய்திகள்

#INDvsNZ : உலகக்கோப்பையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா..!

Published by
murugan

இந்திய அணி 48 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 274 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று நடைபெற்ற  21-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டி தர்மஷாலா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே, வில் யங் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே கான்வே டக் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பிறகு ரச்சின் ரவீந்திரன் களமிறங்க நிதானமாக விளையாடிய வில் யங்  வெறும் 17 ரன் எடுத்து நடையை கட்டினார்.

பின்னர் 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல் , ரச்சின் ரவீந்திரன் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இவர்களின் ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி திணறி வந்த நிலையில் 34 ஓவரில் முகமது ஷமி  ரச்சின் ரவீந்திரன் விக்கெட்டை பறித்து ஜோடியை பிரித்தார். ரச்சின் ரவீந்திரன் 87 பந்தில் 6 பவுண்டரி , 1 சிக்ஸர் உட்பட 75 ரன்கள் சேர்த்தார். பின்னர் களமிறங்கிய  டாம் லாதம் 5 ரன்கள், கிளென் பிலிப்ஸ் 23 ரன்கள், மார்க் சாப்மேன் 6 ரன்கள், மிட்செல் சான்ட்னர்1 , மாட் ஹென்றி டக் ஆகி  விக்கெட்டுகளை இழந்தனர். கடைசி வரை அதிரடியாக விளையாடி வந்த டேரில் மிட்செல் சதம் விளாசி 127 பந்தில் 5 சிக்ஸர், 9 பவுண்டரி உட்பட 130 ரன்கள் குவித்தார்.

இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டைஇழந்து 273 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில்  முகமது ஷமி 5 விக்கெட்களும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களும், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர். 274 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் , சுப்மன் கில் இருவரும் களமிறங்க ஆட்டம் தொடங்கியது முதல் இருவரும் சிறப்பாக விளையாடி வந்தனர். அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் 4 சிக்ஸர் , 4 பவுண்டரி என 46 ரன்கள் எடுத்திருந்தபோது பெர்குசன் தனது முதல் ஓவரின் முதல் பந்திலே ரோஹித் சர்மாவை போல்ட் செய்தார்.

ரோஹித் , சுப்மன் கில் இருவரின் கூட்டணியில் 71 ரன்கள் சேர்க்கப்பட்டது. அடுத்து கிங் கோலி களமிங்கினார். பெர்குசன் தனது 2-வது ஓவரை வீசியபோது சுப்மன் கில் விக்கெட்டை பறித்தார். அடுத்து இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் வந்த வேகத்தில் பவுண்டரி மழையாக விளாசினார். இந்திய அணி 100 ரன்கள் எடுத்தபோது மோசமான வானிலை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலே ஷ்ரேயாஸ் ஐயர் 33 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதில் 6 பவுண்டரி அடங்கும்.

இதைத்தொடர்ந்து, கே.எல் ராகுல் களமிறங்க வழக்கம்போல கோலி, கே.எல் ராகுல் இருவரும் சிறப்பாக விளையாடினர். 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இருவரும் 63 பந்தில் 50 ரன்கள் சேர்த்தனர். நிதானமாக விளையாடிய வந்த கே.எல் ராகுல் 27 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் சூர்யகுமார் யாதவ் களமிறங்க வந்த வேகத்தில் 2 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய கிங் கோலி 61 பந்தில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் இறங்கிய ஜடேஜா உடன் ஜோடி சேர்ந்த கோலி நிதானமாக விளையாடினர். இவர்கள் கூட்டணியில் 53 பந்தில் 50 ரன்கள் சேர்க்கப்பட்டது.

அரைசதம் அடித்த பின்னர் அதிரடியாக விளையாடிய கிங் கோலி  சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 104  பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 95 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த ஜடேஜா 39* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக இந்திய அணி 48 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 274 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் பெர்குசன் 2 விக்கெட்டையும்,  டிரென்ட் போல்ட், மிட்செல் சான்ட்னர் தலா 1 விக்கெட்டை பறித்தனர். புள்ளி பட்டியலில் இந்திய அணி விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

நியூசிலாந்து அணி விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி 20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையில்   நியூசிலாந்து அணியை தோற்கடித்துள்ளது. கடைசியாக 2003 உலகக்கோப்பை தொடரில்  நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

Live : இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…

18 minutes ago

“ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் இல்லை!” புது கண்டிஷன் போட்ட இஸ்ரேல் பிரதமர்!

டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…

41 minutes ago

“தல வந்தா தள்ளிப்போகணும்” அஜித்தால் தன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த பிரதீப்!

சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…

14 hours ago

தமிழகத்தில் நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

15 hours ago

“பா.ஜ.க.வின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும்”..முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…

15 hours ago

“அதை பற்றி நம்ம பேசவேண்டும்”…லீக்கான ரோஹித் – அஜித் அகர்கர் கலந்துரையாடல்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி  தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…

15 hours ago