உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதல்..!
2022 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
2022 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியை மார்ச் 6-ஆம் தேதி மவுன்ட் மௌங்கானுய் என்ற இடத்தில் உள்ள பே ஓவல் மைதானத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த ஆண்டு நடந்த ஆடவர் டி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் ஆடவர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
மார்ச் 10ஆம் தேதி ஹாமில்டனில் நடைபெறும் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் மோதுகின்றன. மார்ச் 16-ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. மார்ச் 19ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா -ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மார்ச் 22-ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. மார்ச் 27 நடைபெறும் போட்டியில் இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. முதல் அரையிறுதிப் போட்டி மார்ச் 30ஆம் தேதி வெளிங்டனிலும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி மார்ச் 31-ல் கிறைஸ்ட் சர்ச்சிலும் நடைபெறுகிறது.
2022 மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி ஏப்ரல் 3-ஆம் தேதி கிறைஸ்ட் சர்ச்சிலும் நடைபெறுகிறது.