டாஸ் வென்று இந்தியா பௌலிங் -மழை காரணமாக 40 ஓவர்களாக குறைப்பு
மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்தியா-தென்னாபிரிக்கா மோதும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பௌலிங் தேர்வு செய்திருக்கிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் தென்னாபிரிக்க அணி மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ள நிலையில் ஒருநாள் போட்டித்தொடர் இன்று லக்னோவில் தொடங்குகிறது. இன்று 1:30 மணிக்கு தொடங்கவேண்டிய முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 3 மணிக்கு ஆரம்பிப்பதாக முதலில் அறிவித்திருந்த நிலையில் மழைப்பொழிவு இருந்த காரணத்தால் மேலும் தாமதமாக தொடங்கும் என்று கூறப்பட்டது. 3:30 மணிக்கு டாஸ் போடப்பட்டது, டாஸ் வென்ற இந்திய கேப்டன் தவான் முதலில் பந்து வீசப்போவதாக அறிவித்தார். மேலும் மழை காரணமாக ஆட்டம் 40 ஒவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி: ஷிகர் தவான் (கேப்டன்), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான் மற்றும் முகமது சிராஜ்
தென்னாபிரிக்க அணி: ஜான்மேன் மலான், குயின்டன் டி காக்(w), டெம்பா பவுமா(கேப்டன்), ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி