பழி தீர்த்த இந்தியா..!தொடரை கைப்பற்றி முறுக்கி காட்டிய ரோகித் படை ..!

Published by
kavitha

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான  கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்கிறது.5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

கடைசி போட்டிக்கான  இந்திய அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டது.காயத்தில் இருந்து குணம் அடைந்ததால் தோனி தேர்வு செய்யப்பட்டார். இதே போல முகமது‌ஷமி, விஜய்சங்கர் ஆகியோரும்  போட்டிக்கான அணியில் இடம் பெற்றனர்.மற்றும் முந்தைய தினேஷ்கார்த்திக் மற்றும்  குல்தீப்யாதவ், கலீல் அகமது ஆகியோர் கழற்றிவிடப்பட்டனர்.

இந்நிலையில் இன்று  கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்நிலையில் நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மளமளவென இந்திய விக்கெட்டுகள் அனைத்தும் சரிந்தன. 18 ரன் எடுப்பதற்குள் இந்திய அணி  4 விக்கெட்டை இழந்து தவித்தது.

ரோகித்சர்மா 2 ரன்னிலும், சுப்மன் ஹில் 7 ரன்னிலும் ஹென்றி பந்தில் ஆட்டம் இழந்தனர். தவான் 6 ரன் மற்றும்  டோனி 1 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி தந்த நிலையில் 5வது விக்கெட்டான அம்பதிராயுடு மற்றும்  விஜய் சங்கர் ஜோடி விக்கெட் சரிவை  சற்று தடுத்து நிறுத்தியது என்றே சொல்லலாம்.இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிதானமாக ஆடிய நிலையில்  29வது ஓவரில் இந்தியா 100 ரன்னை தொட முடிந்தது.

இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறக்கப்பட்ட தமிழக வீரர் விஜய் சங்கர்அரை சதத்தை எடுப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 64 பந்தில் 4 பவுண்டரியுடன் 45 ரன்களை எடுத்து  துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார்.

இறுதியில் 49. 5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது.  இதில் அதிகபட்சமாக அம்பதிராயுடு 90 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார்.மறுபுறம்    விஜய் சங்கரும்- ஹர்திக் பாண்டியாவும் தலா 45 ரன்களை எடுத்து.ஸ்கோரை உயர்த்திய நிலையில்  ஹர்திக் 22 பந்துகளில்  45  ரன்கள் எடுத்தார்.நியூசிலாந்து அணியில்  அபாரமாக பந்து வீசிய  மேட் ஹென்றி 4, பவுல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

253 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கிய தொடக்க வீரர்களான கொலின் முன்ரோ (24) மற்றும்  நிக்கோல்ஸ் (8) ஆகியோரை முகமது ஷமி தனது அதிரடியால் வெளியேற்றி நியூசிலாந்து அணிக்கு தொடத்திலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும் ராஸ் டெய்லர் 1 ரன் எடுத்த இருந்த போது  ஹர்திக் பாண்டியாவின்  பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன் பின் 4வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் டாம் லாதம் ஜோடி சேர்ந்தது விளையாடினர்  இந்த ஜோடி மிகவும் நிதானமாக விளையாடியது.

இதனால் வெற்றி இரண்டு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு சமமாக இருந்த போது தோனியின் ரன் அவுட்  இந்திய வெற்றியை பிரகாசமாக மிளிரவைத்தது.

இதன் பின்  நியூசிலாந்து 44.1 ஓவரில் ஆல்அவுட்டாகி 217 ரன்கள் எடுத்து தோல்வியை அடைந்தது. இதனால் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 4-1  என்று கைப்பற்றியது.

இந்திய வெற்றிக்கு வித்திட்ட பந்து வீச்சாளர்கள் சாஹல் 3 விக்கெட் மற்றும் முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Published by
kavitha

Recent Posts

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

39 mins ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

1 hour ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

2 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

2 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

3 hours ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

3 hours ago