முதல் இன்னிங்கிஸ் :
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்து வீச முடிவு செய்தது அதன்படி களமிறங்கியது இந்தியா.முதல் இன்னிங்சில் ஹனுமான் விஹாரி(111) அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். கோலி ,அகர்வால் ,இஷாந்த் சர்மா அரை சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர்.முதல் இன்னிங்சில் இந்தியா 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது .
பும்ரா ஹாட்ரிக் :
அதன் பின் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 117 ரன்களுக்கு சுருண்டது.இதில் பும்ராவின் பந்து வீச்சு பிரமாதமாக இருந்தது 6 விக்கெட்களை வீழ்த்தினார். அவரின் பந்தை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து வீழ்ந்தனர் .பும்ரா டேரன் பிராவோ, ஷமாரா புரூக்ஸ், ரோஸ்டன் சேஸ் ஆகியோரது விக்கெட்டை ஹாட்ரிக்காக எடுத்தார்.இதன் மூலம் டெஸ்ட் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 3வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார் .
2வது இன்னிங்கிஸ்
பின்பு 2வது இன்னிங்சில் 299 ரன்கள் முன்னிலை பெற்று விளையாட தொடங்கியது இந்திய அணி அதில் தொடக்க ஆட்டக்கார்களான லோகேஷ் ராகுல் மற்றும் மாயங் அகர்வால் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர் .பின்பு களமிறங்கிய புஜாரா 27 ரன்களுக்கும் கோலி முதல் பந்திலே ரன் ஏதும் எடுக்காமல் ரோச் வீசிய பந்தில் ஜே ஹாமில்டனிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றத்தை அளித்தார்.
ரஹானே மற்றும் ஹனுமான் விஹாரி அரைசதம் அடித்தனர் .பின்பு கேப்டன் கோழி 168 ரன் அடித்திருந்த பொழுது டிக்ளர் செய்வதாக அறிவித்தார் .இதனால் வெஸ்ட் இண்டீஸ் 468 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது முதல் இன்னிங்ஸ் போல் இந்திய அணியின் ஆக்கிரோஷமான பந்து வீச்சு தொடர்ந்தது .இதனால் வெஸ்ட் இண்டீஸ் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது .வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷமர் ப்ரூக்ஸ் மட்டும் அரை சதம் அடித்தார் .
இதன் மூலம் இந்தியா 257 ரன்கள் வித்யாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது .
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…