17.2 ஓவரில் 155 ரன்கள் எடுத்து நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வென்று இந்த டி20 தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட t20 தொடரின் 2-வது போட்டி இன்று ராஞ்சியில் உள்ள JSCA மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் தொடக்க வீரர்களாக மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல் இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடக்கத்தில் இருந்து இருவரும் சிறப்பாக விளையாடினார். நிதானமாக விளையாடிய வந்த மார்ட்டின் கப்டில் 5ஓவரில் தீபக் சாஹர் ஓவரில் 31 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய மார்க் சாப்மேன் வந்த வேகத்தில் 21 ரன் எடுத்து வெளியேறினார். சிறப்பாக விளையாடி வந்த தொடக்க வீரர் டேரில் மிட்செல் 31 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து மத்தியில் இறங்கிய க்ளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 34 ரன்கள் குவிக்க அடுத்தடுத்து களம் கண்ட வீரர்கள் சொற்ப ரன் எடுக்க இறுதியாக நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் ஹர்ஷல் படேல் 2, அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், அஸ்வின் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
20 ஓவரில் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மாவும், கே.எல்.ராகுலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை கடந்தனர். கேப்டன் ரோஹித் சர்மா 36 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து சௌதி பந்தில் குப்திளிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, கே.எல்.ராகுல் 49 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து, சௌதி பந்தில் பிலிப்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயரும், ரிசப் பண்டும் களத்தில் கடைசி வரை நின்று 17.2 ஓவரில் 155 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி அணியை வெற்றிபெற செய்தனர். இடையில் சூரியகுமார் யாதவ் 1 ரன்னில் ஆட்டமிழந்திருந்தார்.
இந்த போட்டியில் வென்றதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2இல் வெற்றி பெற்று 2-0 என்கிற கணக்கில் நியூஸிலாந்திடம் இருந்து தொடரை கைப்பற்றியுள்ளது.
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…
லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…
செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…
சென்னை : அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியான…