Cricket Breaking : 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

Default Image

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. சிட்னியில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

இந்திய அணி :

டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிங்கிய இந்திய அணியில், கே.எல்.ராகுல் 9 ரன்னில் அவுட் ஆனார். கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அரைசதமடித்த ரோஹித் சர்மா 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பின் கோலி – சூரியகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக விளையாடியது. சிறப்பாக விளையாடிய கோலி 62 ரன்களும், சூரியகுமார் 51 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது.

நெதர்லாந்து அணி :

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்களான விக்ரம்ஜித் சிங்(1) புவனேஷ்வர் குமாரிடம் ஆட்டமிழந்தார்.அதன் பின்பு வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை.அதிகபட்சமாக டிம் பிரிங்கிள் 20 ரன்களை எடுத்தார்.நெதர்லாந்து  20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது.இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் முகமது ஷமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

சிட்னியில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி, வங்கதேசத்தை வீழ்த்தியிருந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்