5வது டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி… தொடரை கைப்பற்றியது இந்தியா!
INDvsENG : இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. அதன்படி, இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25ம் தேதி தொடங்கியது. இதில், 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து இங்கிலாந்து அணி ஷாக் கொடுத்தது.
Read More – INDvsENG : டாப் ஆர்டரை காலி செய்த அஸ்வின் ..! 100-வது டெஸ்டில் சாதனை படைப்பாரா ..?
இதனைத்தொடர்ந்து நடைபெற்று 3 மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை செலுத்தியது. அதுமட்டுமில்லாமல், 3-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இந்த சூழலில், 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் கடைசி போட்டி கடந்த 7ம் தேதி தர்மசாலா ஸ்டேடியத்தில் தொடங்கியது.
Read More – INDvsENG : அடேங்கப்பா .. 700 விக்கெட்டா ..! ஆண்டர்சன் படைத்த புதிய சாதனை ..!
இந்த போட்டியில் டாஸ் என்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 218 ரன்களை அடித்தது. இதில், இந்திய அணி சார்பில் அஸ்வின் 4, குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 477 ரன்களை குவித்தது.
இதில், கேப்டன் ரோஹித் சர்மா, கில் ஆகியோரது சதங்களும் அடங்கும். இங்கிலாந்து அணி சார்பில் சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்திய அணியின் ரன் குவிப்பால் 259 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து இந்திய அணியின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Read More – ICC : இவங்க தான்பா ..! 30-வயசுக்கு மேல அதிக சதம் அடிச்சவங்க ..!
இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி அபார வெற்றி பெற்று,இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி பந்துவீச்சை பொறுத்தவரை அஷ்வின் 5, பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த டெஸ்ட் தொடரின் தொடர் ஆட்ட நாயகனுக்கான விருது யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வழங்கப்பட்டது.