ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்கள் எடுத்ததை தொடர்ந்து இந்திய அணி, 336 ரன்கள் அடித்தது. பின்னர் நடைபெற்ற இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி, 294 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 55 ரன்களும், வார்னர் 48 ரன்கள் அடித்தார். பந்துவீச்சை பொறுத்தளவில் சிராஜ் தலா 5 விக்கெட்களும், ஷர்த்துல் தாக்குர் தலா 4 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார்கள். 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா – சுப்மன் கில் களமிறங்கினார்கள். 1.5 ஆம் ஓவர் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் 4 ரன்கள் எடுத்தது.
மழை குறுக்கிட்டதால் நான்காம் நாள் ஆட்டம் முடிவடைந்தது. அதன்படி, 324 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி, இன்றைய இறுதிநாள் ஆட்டத்தை தொடங்கியது. போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் ரோஹித் சர்மா 7 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து புஜாரா களமிறங்கினார்கள். நிதானமாக ஆடிவந்த புஜாரா, சுப்மன் கில்லுடன் இணைந்தார். இருவரும் பொறுமையாக ஆடிவந்த நிலையில், 91 ரன்கள் அடித்து சுப்மன் கில் தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைதொடர்ந்து களமிறங்கிய ரஹானே, 24 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேற, மறுமுனையில் இருந்த புஜாரா 56 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய ரிஷப் பந்த் பொறுமையாக ஆடிவந்தார். பின்னர் களமிறங்கிய மயங்க் அகர்வால் 9 ரன்களில் வெளியேற, அவரையடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்துடன் இணைந்தார். பின்னர் இருவரும் அதிரடியாக ஆடத் தொடங்கினார்கள்.
53 பந்துக்கு 50 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதிரடியான ஆட்டத்தை வாஷிங்டன் சுந்தர் வெளிக்காட்டினார். 22 ரன்கள் அடித்து வாஷிங்டன் சுந்தர் வெளியேறியதை தொடர்ந்து, நவதீப் சைனி களமிறங்கினார். 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ரிஷப் பந்த் 4 ரன்கள் அடித்து இந்திய அணியை 4 ஆம் டெஸ்ட் போட்டியை வெற்றிபெற செய்தார்.
இதன்மூலம் இந்திய அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் நான்காம் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் கவாஸ்கர் தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும், 2 டெஸ்ட் தொடர்களில் வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…