#Womens World Cup: இந்தியாவிற்கு அடிமேல் அடி .., ஆஸ்திரேலியா அணி த்ரில் வெற்றி..!

Default Image

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி மற்றொரு தோல்வியை சந்தித்துள்ளது. ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தியது.

முதலில் இறங்கிய இந்தியா: 

டாஸ் இழந்து முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. நான்காவது ஓவரில் ஸ்மிருதி மந்தனா (10) பந்தில் அவுட் ஆனார். இதையடுத்து பேட்டிங்கை வலுப்படுத்த ஆல்ரவுண்டர் தீப்தி சர்மாவுக்கு பதிலாக களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் ஷெபாலி வர்மா 6-வது ஓவரிலேயே 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பின்னர் இறங்கிய மிதாலி 96 பந்துகளில் 68 ரன்களும், யாஸ்திகா பாட்டியா 83 பந்துகளில் 59 ரன்கள் குவித்தனர். 3-வது விக்கெட்டுக்கு இவர்கள் 130 ரன்கள் சேர்த்தனர். அடுத்து இறங்கிய  ஹர்மன்பிரீத் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் எடுத்தார். இறுதியில் இறங்கிய  பூஜா வஸ்த்ரகர்  28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த அவர் ரன் அவுட் ஆனார். இதனால், இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 277 ரன்கள் எடுத்தனர்.

278 ரன் இலக்கு:

278 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரேச்சல் ஹைன்ஸ் மற்றும் அலிசா ஹீலி ரீ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தனர். 20வது ஓவரில் ஹீலி ஆட்டமிழந்ததார்.  ஹீலி மிதாலியிடம் கேட்ச் கொடுத்தார். அவர் 65 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்தார். 21வது ஓவரில் பூஜா வஸ்த்ரகர் ஓவரில் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷிடம் ரேச்சல் ஹைன்ஸ் கேட்ச் கொடுத்தார்.அவர் 53 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்தார்.

97 ரன்கள் குவித்த மெக் லானிங்:

பிறகு கேப்டன் மெக் லானிங், அலிசா பெர்ரியுடன் இணைந்து சிறப்பாக விளையாடினர். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தனர். ஆனால் 42-வது ஓவரில் அலிசா பெர்ரி விக்கெட்டை இழந்தவுடன் ஆஸ்திரேலிய அணி சிறிது நேரம் சிக்கலில் தவித்தது. அலிசா பெர்ரி 51 பந்துகளில் ஒரு பவுண்டரி உடன் 28 ரன்கள் எடுத்தார். பின்னர், 49-வது ஓவரில் மெக் லானிங் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். மெக் லானிங் 107 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

இருப்பினும் பெத் மூனி 20 பந்துகளில் 30* ரன் எடுத்து கடைசிவரை களத்தில் நின்று இறுதியாக அணியை வெற்றி பெற செய்தார். ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 280 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அரையிறுதிக்கு செல்வது கடினம்:

இந்த தோல்வியால் இந்தியா அரையிறுதிக்கு செல்வதை கடினமாக்கியது. ஆஸ்திரேலியா அணி விளையாடிய 5 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா விளையாடிய 5 போட்டிகளில் இது மூன்றாவது தோல்வியாகும். முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்திருந்தது.

அதே சமயம், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 107 மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக  155 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்