குறுக்கிட்ட மழை… இந்தியா – ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் போட்டி டிரா!
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மையால் டிராவில் முடிந்தது.
பிரிஸ்பேன் : பிரிஸ்பேனில் நடைபெற்று வந்த இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் 5ஆம் நாள் ஆட்டம் இன்று மழைக்கிடையே டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது.
இதுவரை 4வது நாள் போட்டி நிறைவுற்ற நிலையில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ள நிலையில், இன்று நடைபெற்ற வரும் 5வது டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மழை என்றே சொல்லலாம். கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை பிரிஸ்பேனில் மழை பெய்யும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் முன்னதாக முன்னெச்சரிக்கை கொட்டுத்திருந்தது.
அதன்படி, தொடர்ந்து நடைபெற்ற 5ஆம் நாள் ஆட்டமும் மோசமான வானிலையால் தலைகீழாக மாறியது. அதன்படி, ஐந்தாவது நாளான இன்று இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 445 ரன்கள் எடுத்த நிலையில், இந்தியா மோசமாக விளையாடி 260 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதன்பின், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 89 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து டிக்ளேர் செய்தது. இதனை தொடர்ந்து, 275 என்ற இலக்கோடு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2.1 ஓவர்களில் 8 ரன்கள் எடுத்திருந்தது.
அப்போது, போதிய வெளிச்சம் இல்லாததால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. அதோடு, மழையும் லேசாக பெய்யத் தொடங்கியிருக்கிறது. பின்னர், தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி கைவிடப்பட்டது. இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன.
இதனை தொடர்ந்து, ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து டிசம்பர் 26 அன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது.