இந்தியா – ஆஸ்திரேலியா: 2வது ஒருநாள் போட்டி!! வானிலை மற்றும் ஆடுகள தன்மை அறிவிப்பு!!
- இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாக்பூர் மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு துவங்க உள்ளது
- ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடரில் 2 போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.
இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு நாக்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது.
நாக்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மேகமூட்டம் இன்று காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் பகலிரவு ஆட்டம் என்பதால் இரவு நேர எங்களில் நாக்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பணி ஓரளவிற்கு பெய்யும் என்றும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு பந்து வீசுவது சற்று கடினம்.
ஆடுகள தன்மை
நாக்பூர் மைதானம் பேட்டிங் ஆகும். இந்த மைதானத்தில் எப்போதும் முதலில் பேட்டிங் செய்யும் அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனைத் தாண்டி இந்த மைதானம் அடிக்கடி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக செயல்படுவதாக ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.