[Image source : Twitter/@BCCI]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளின் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஆண்டுதோறும் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இந்த வருடம் ஜூன் 7ஆம் தேதி இங்கிலாந்து,லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தாண்டு டெஸ்ட் சாம்பியன் போட்டியில் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.
இதில், இந்தியா சார்பில் கலந்துகொள்ளும் வீரர்கள் பட்டியலை தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் , விராட் கோலி, புஜாரா, சுப்மன் கில், கே.எஸ்.பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உனத்கட், இஷான் கிஷான், உமேஷ் யாதவ், பெஞ்சில் இருக்கும் மாற்று வீரர்களாக முகேஷ் குமார், சூரியகுமார் யாதவ், ஜெய்ஸ்வால் ஆகியோர் என பட்டியல் வெளியாகியுள்ளது.
அதே போல ஆஸ்திரேலிய அணி சார்பாக பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலன்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, நாதன் லியோன், ஜோஷ் இங்கிலிஸ், டாட் மர்பி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர் ஆகியோரில் 11 பேர் களமிறங்க உள்ளனர்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…