முதல் டி20 போட்டி..! நாளை இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீச்சை.!

IND vs AUS T20

2023 ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை தொடரானது கடந்த 19ம் தேதியுடன் முடிந்தது. அத்தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. நரேந்திர மோடி மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, 6 வது முறையாக ஐசிசி உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதைத்தொடர்ந்து, தற்போது ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன்படி, நவம்பர் 23ம் தேதி தொடங்கும் இந்தத் தொடரின் போட்டிகள் விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், கவுகாத்தி, ராய்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய ஐந்து மைதானங்களில் நடைபெறுகிறது.

விராட்கோலியின் டி20 சாதனையை முறியடிப்பாரா- சூர்யகுமார் யாதவ்..!

இதில் முதல் டி20 போட்டி நாளை இரவு 7 மணியளவில் விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் போன்ற மூத்த வீரர்கள் இத்தொடரில் இடம் பெறவில்லை.

அதேபோல உலகக்கோப்பைத் தொடரில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகிய ஹர்திக் பாண்டியாவும் இதில் இல்லை. உலக கோப்பையில் விளையாடிய சூரியகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவர் மட்டுமே இந்த டி20 தொடரில் விளையாட உள்ளனர்.

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இதுவரை 26 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளன. இதில் 15 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 10 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது. ஒரு போட்டி மட்டும் முடிவில்லாமல் உள்ளது. இதை வைத்துப் பார்க்கையில் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது.

ஆனால் உலக கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் வெற்றியை அடையும் நோக்கில் இப்போட்டியிலும் ஆஸ்திரேலியா கடுமையாக விளையாடும். எனவே இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைகிறார் தேவ்தத் படிக்கல்..?

இந்திய அணி

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா அவேஷ் கான், முகேஷ் குமார்.

ஆஸ்திரேலியா அணி

மேத்யூ வேட் (கேப்டன்), டிரெவிஸ் ஹெட், ஆரோன் ஹார்டி, மேக்ஸ்வெல், ஸ்டீவ் சுமித், ஸ்டோ னிஸ், டிம் டேவிட், பெகரன் டார்ப், ஜோஸ் இங்லிஸ், தன்வீர் சங்கா, அபோட், நாதன் எல்லிஸ், கானே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, மேத்யூ ஷார்ட்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
Sketches of terrorists
Terrorist Attack
j&k terror attack
trapped in Kashmir terror
Khawaja Asif
Pahalgam Terrorist Attack