முதல் இன்னிங்சில் இந்திய அணி 337 ரன்னுக்கு ஆட்டமிழந்தது
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 578 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 218, சிபிலி 87, பென் ஸ்டோக்ஸ் 82 ரன்கள் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடங்க வீரர்களாக இறங்கிய சுப்மான் கில் 29, ரோகித் 6 ரன்களுடன் வெளியேறினார். பின்னர், இறங்கிய துணை கேப்டன் ரஹானே 1 , கேப்டன் கோலி 11 ரன்கள் எடுத்து பெவிலியன் திருப்பினார்கள். இதனால், சரிவில் இருந்த இந்திய அணியை புஜாரா மற்றும் பண்ட் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ரன்னை சற்று உயர்த்தினார்கள்.
நேற்றைய 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் எடுத்தநிலையில், இன்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. களத்தில் சிறப்பாக விளையாடி வந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் விளாசி 85* ரன்கள் எடுத்தார். இறுதியாக இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் எடுத்துள்ளது.
இதனால், இங்கிலாந்து அணி 266 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 73, பண்ட் 91 ஷிங்டன் சுந்தர் 85* ரன்கள் எடுத்தனர். தற்போது இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சிஸை விளையாடி வருகிறது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…