244 ரன்னில் இந்தியா ஆல் அவுட்.. ஆஸ்திரேலியா 94 ரன்கள் முன்னிலை..!

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. மார்னஸ் 91 ரன்னில் விக்கெட்டை இழந்தார். ஸ்மித் சதம் விளாசி 131 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியில் ஜடேஜா 4, பும்ரா நவ்தீப் சைனி தலா 2, முகமது சிராஜ் 1 விக்கெட்டை பறித்தனர். பின்னர், இந்திய அணியில் தொடக்க வீரர்களாக சுப்மான் கில், ரோஹித் சர்மா இருவரும் இறங்கினர். நிதானமாக விளையாடி வந்த ரோஹித் சர்மா 26 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின் புஜாரா களமிறங்கினார். நிதானமாக விளையாடி வந்த சுப்மான் கில் அரைசதம் அடித்த விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
நேற்றைய இரண்டாம்நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 45 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 96 ரன்கள் எடுத்தனர். களத்தில் புஜாரா 9* , ரஹானே 5* ரன்களுடன் இருந்த நிலையில், இன்று 3-ம் நாள் ஆட்டம் தொடங்கிய இந்திய அணி ஆட்டம் தொடங்கிய சில ஓவரிலே ரஹானே விக்கெட்டை இழக்க வந்த வேகத்தில் ஹனுமா விஹாரி 4 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப மத்தியில் இறங்கிய பண்ட் மற்றும் ஜடேஜா இருவரும் கூட்டணி அமைத்து நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
ஆனால் இவர்களின் கூட்டணி நீண்ட நேரம் நீடிக்கவில்லை இதனால் பண்ட் 36, ரன்னில் விக்கெட்டை இழந்தனர். இறுதியாக இந்திய அணி 100.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 244 ரன்கள் எடுத்தனர். ஜடேஜா கடைசிவரை 28* ரன்களுடன் இருந்தார். இந்திய அணியில் ஹனுமா விஹாரி, அஸ்வின் மற்றும் பும்ரா ஆகியோர் ரன் அவுட் செய்யப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ் 4, ஹேசில்வுட் 3,
ஸ்டார்க் 1 விக்கெட்டை பறித்தனர்.
இதன்காரணமாக 94 ரன்கள் ஆஸ்திரேலிய அணி முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளது.