இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 92.1 ஓவரில் 217 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர்.
நேற்றைய 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 64.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் விராட் கோலி 124 பந்துகளுக்கு 44 , ரஹானே 79 பந்துகளுக்கு 29 ரன்களுடன் இருந்தனர். இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில், காலையில் சவுத்தாம்ப்டனில் மழை பெய்தது.
இதனால், மைதானத்தில் ஈரப்பதம் இருந்தது. இதைத்தொடர்ந்து, போட்டி 3 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக 3.30 மணிக்கு தொடங்கியது. இன்றைய ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் கேப்டன் கோலி விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
மத்தியில் இறங்கிய ஜடேஜா 15, அஸ்வின் 22 ரன்கள் எடுத்தனர். ரிஷாப் பண்ட் , இஷாந்த் சர்மா, ஷமி தலா 4 ரன்கள் எடுத்தனர். இறுதியாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 92.1 ஓவரில் 217 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இப்போட்டியில் நியூஸிலாந்து அணியில் கைல் ஜேமீசன் 5 விக்கெட்டை பறித்தார்.
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 15 கோடிக்கு ஜேமீசனை ஏலம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. நியூஸிலாந்து அணி தற்போது தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…