அடுத்தடுத்து டக் அவுட்…153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா ..!
தென்னாப்பிரிக்கா இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையே இன்று 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 23.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 55 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக பெடிங்கம் 12, வெர்ரைன் 15 ரன்கள் மட்டுமே எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கு ரன்களுடன் வெளியேறினர். இந்திய அணியில் முகமது சிராஜ் 6 விக்கெட்களையும் , ஜஸ்பிரித் பும்ரா, முகேஷ் குமார் ஆகியோரும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள். இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்தில் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இதை எடுத்து சுப்மன் கில் களமிறங்க ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 39 ரன்கள் எடுத்தார். பின்னர் விராட் கோலி களம் கண்டார். மறுபுறம் விளையாடி வந்த சுப்மன் கில் 55 பந்தில் 36 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இருப்பினும் அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கிய இரண்டு பந்திலே டக் அவுட் வெளியேற மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த விராட் கோலி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 46 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்
அதில் ஆறு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். இதை எடுத்து வந்த விக்கெட் கீப்பர் கே.எல் ராகுல் 8 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஜடேஜா, பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் அனைவரும் டக் அவுட் ஆகி வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் இந்திய அணி 34.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 109 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதைத் தொடர்ந்து தென்னாபிரிக்க அணி தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.