இன்று இந்தியா-ஆப்கானிஸ்தான் சூப்பர் 8 போட்டி! வெற்றி வியூகம் என்ன?

Published by
அகில் R

டி20I சூப்பர் 8: நடைபெற்று வரும் சூப்பர் 8 சுற்றின் 3-வது போட்டியும், டி20 உலகக்கோப்பை தொடரின் 43-வது  போட்டியுமான இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.

நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஏற்கனவே 2 போட்டிகள் முடிந்த நிலையில், இன்று இரவு 8 மணிக்கு சூப்பர் 8 சுற்றின் 3-வது போட்டியாக இந்தியா அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியானது பார்படாசில் உள்ள கேனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.

இந்த தொடரில் இனி வரும் அனைத்து போட்டிகளும், இந்திய அணிக்கு மிகமுக்கிய போட்டிகளாகும். இதில் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுவதால் எளிதில் வெற்றி பெறலாம் என கருதுவதும் தவறானது. ஆப்கானிஸ்தான் அணி முதல் சுற்றில் 4 போட்டிகளில் விளையாடி அதில் 3 வெற்றிகளை பெற்றுள்ளார்கள்.

அதிலும், நியூஸிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் ஆப்கானிஸ்தான் அணியின் அதிரடியான பேட்டிங்கும், சுழற் பந்து வீச்சின் ஆதிக்கமும் தான். இந்தியா அணியில் பேட்டிங் வரிசையில் ஒரு சில சறுக்கல்கள் இருப்பதால், ஆப்கானிஸ்தான் அணிக்கு அது ஒரு பெரிய வாய்ப்பாக அமையலாம்.

வெற்றி வியூகம்:

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு, தொடக்கத்தில் களமிறங்கும் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் அதிரடியாக விளையாடி ஆக வேண்டும். இந்த தொடரை பொறுத்தவரை இந்த இருவருக்கும் சருக்கலான தொடராகவே அமைந்துள்ளது. இதனால், இதனை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றனர்.

மேலும், பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விராட்  கோலியின் ஃபார்மை குறித்து பேசி இருந்தாலும், ஒரு சிலர் அவர் தொடக்கத்தில் பேட்டிங் இறங்குவதற்கு பதிலாக 3-வதாக களமிறங்கலாம் என பல கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர். மேலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்களை எடுத்த இந்தியா வீரர்களில் விராட் கோலி தான் முதலிடத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் ஆப்கானிஸ்தான் அணி இந்த போட்டியை வெல்வதற்கு இந்திய அணியின் வலுவான பந்து வீச்சை சமாளித்து, தக்க நேரத்தில் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடினாலே போட்டியை கைப்பற்றலாம் எனவும் பல முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் தங்களது கருத்துக்களை கம்மெண்ட்ரியில் தெரிவித்து வருகின்றனர்.

நேருக்கு நேர்:

இந்த இரு அணிகளும் மொத்தம் 3 டி20 உலகக்கோப்பை போட்டிகளை விளையாடியுள்ளனர். அதில் 3 போட்டிகளையும் இந்தியா அணி தான் கைப்பற்றியுள்ளது. மேலும், இதை தாண்டி 4 சர்வேதச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளனர். அதிலும் ஆதிக்கம் செலுத்தி 4 போட்டிகளையும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

சாத்தியமான 11 வீரர்கள்

இந்தியா அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்),சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.

ஆப்கானிஸ்தான் அணி

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), ரஷித் கான் (கேப்டன்), இப்ராஹிம் சத்ரான், குல்பாடின் நைப், அஸ்மத்துல்லாஹ் உமர்சாய், நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, கரீம் ஜனத், நூர் அஹ்மத், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.

Published by
அகில் R

Recent Posts

பட்டைய கிளப்பும் புஷ்பா-2.! மிரட்டல் டிரெய்லர் இதோ…

சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…

2 hours ago

“2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தருமபுரியில் போட்டி” – மாவட்ட தலைவர் சிவா!

தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…

2 hours ago

“அடுத்த 9 நாட்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை” வானிலை ஆய்வாளர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

3 hours ago

“அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” – நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்!

சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…

5 hours ago

“வேறு வழி இல்லை!”டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா.! கெஜ்ரிவாலுக்கு பரபரப்பு கடிதம்.!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…

5 hours ago

30 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா செல்லலாம்.! எலான் மஸ்க் பலே திட்டம்.!

சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…

6 hours ago