முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 84 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரராக மயங்க் அகர்வால், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர்.
தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 13 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். சிறப்பாக விளையாடிய சுப்மான் கில் 52 ரன்கள் குவித்தார். அடுத்து களமிறங்கிய புஜாரா 26, ரஹானே 35 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்ப பின்னர், கூட்டணி அமைத்த ஷ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய இருவருமே அரைசதம் விளாசினார்.
இந்நிலையில், முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 84 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்தனர். களத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் 75* , ஜடேஜா 50* ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர். நியூசிலாந்து அணியில் கைல் ஜேமிசன் 3, டிம் சவுத்தி 1 விக்கெட்டை பறித்தனர்.
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…