விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.இதில் ஹாமில்டனில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்நிலையில் , இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று ஆக்லாந்து நகரில் நடைபெற இருக்கிறது. இதில், இந்திய அணியில், தொடக்க வீரர்களாக களம் இறங்கும் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆல்-ரவுண்டர் வரிசையில் கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா உள்ளனர். இதேபோல், நியூசிலாந்து அணி பேட்டிங்கில் ராஸ் டெய்லர் நல்ல பார்மில் உள்ளார். இதேபோல் ஹென்றி நிகோல்ஸ், டாம் லாதம் ஆகியோரும் சேர்ந்து பேட்டிங்கில் வலுவாக உள்ளனர்.பந்து வீச்சில் டிம் சவுத்தி, பென்னட், சான்ட்னர், சோதி ஆகியோர் உள்ளனர்.
இன்று நடைபெறும் போட்டி இரு அணிகளும் மோதும் 109-வது போட்டியாகும். இதுவரை நடந்த 108 போட்டிகளில் இந்தியா 55 முறையும், நியூசிலாந்து 47 முறையும் வெற்றி பெற்றன. ஒரு போட்டி டை ஆனது. 5 ஆட்டங்களில் முடிவு இல்லை. இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. வெற்றியின் முனைப்பில் பேட்டிங்கை எதிரிகொள்ள நியூசிலாந்து களத்தில் இறங்கியுள்ளது.
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…