ஹாட்ரிக் சாதனை படைத்த குல்தீப்…107 ரன் வித்தியாசத்தில் இந்தியா அசத்தல் வெற்றி
- 107 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
- ஹாட்ரிக் சாதனை படைத்த குல்தீப்
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்று இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது.முதலில் பேட்டிங்க் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது.
388 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிரங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்களை மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணியினால் எடுக்க முடிந்தது.இதனால் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய வீரர் குல்தீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 2வது முறையாக ஹாட்ரிக் விக்கெட் எடுத்து குல்தீப் அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவருடைய இந்த விக்கெட் இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் உதவியது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற சம நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.