IND vs SA : போராடிய இந்திய அணி… திருப்பிக் கொடுத்த தென்னாபிரிக்கா! தொடரை சமன் செய்து அசத்தல்!
நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றிப் பெற்றது.
ஜார்ஜ் பார்க் : இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி, முதலில் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. சற்றும் எதிர்பாராத இந்திய அணி தென்னாபிரிக்காவின் அபார பந்து வீச்சால் தடுமாறியது. கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் இந்த முறை 0 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
அவரைத் தொடர்ந்து, வந்த சூரியகுமார் யாதவ், அபிஷேக் சர்மா இருவரும் 4 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். அவர்களைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த திலக் வர்மாவும், அக்சர் பட்டேலும் சிறுது நேரம் நிலைத்து விளையாடி ரன்களைச் சேர்த்தனர்.
இதனால், காரணமாக இந்திய அணியின் ஸ்கோர் சற்று முன்னேறியது. ஆனால், திலக் வர்மா 20 ரன்களுக்கும், அக்சர் பட்டேல் 27 ரன்களுக்கும் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி மீண்டும் சரிவை நோக்கிச் சென்றது.
அதன்பின், மீண்டும் ஹர்திக் பாண்டியாவின் பொறுமையான ஆட்டத்தால் இந்திய அணி போராடி 100 ரன்களைக் கடந்தது. இறுதியில், 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 20 ஓவருக்கு வெறும் 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. நிலைத்து விளையாடிய ஹர்திக் பாண்டியா 39* எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென்னாப்பிரிக்க அணியில் ஜான்சன், கோட்சியா பீட்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தனர். அதன் பின் எளிய இலக்கான 125 ரன்களை நோக்கி தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் களமிறங்கியது.
இந்திய அணியைப் போலவே பேட்டிங்கில் சொதப்பிய தென்னாபிரிக்கத் தொடக்க வீரர்கள், பவாபிளேவில் பவுண்டரிகளை எடுக்க திணறியது. மேலும், அந்த அளவிற்கு வருண் சகர்வர்த்தி தனது சூழலால் தென்னாப்பிரிக்க அணியை கட்டிப்போட்டார்.
அவரது சூழலால் 5 முக்கிய பேட்ஸ்மேன்களை சரியான நேரத்தில் கழட்டினார். இதனால் டி20 போட்டிகளில் முதல் முறையாக 5 விக்கெட் ஹால் எடுத்து புதிய சாதனைப் படைத்தார். ஆனால், மறுமுனையில் அதிரடி வீரரான ஸ்டப்ஸ் நிலைத்து விளையாடி அணிக்காக ரன்களை சேர்த்தார்.
இரண்டு ஓவர்கள் இந்திய அணி பக்கம் போட்டி இருந்தால், இரண்டு ஓவர்கள் தென்னாப்பிரிக்க அணியின் பக்கம் போட்டி இருக்கும். இதனால், போட்டி விறுவிறுப்பின் உச்சத்துக்கு சென்றது. ஒரு கட்டத்தில் 86-7 என தென்னாப்பிரிக்க அணி திணறிய போது அந்த அணியின் வீரரான கோட்சியா, அர்ஷதீப் சிங்கின் ஓவரில் ஆட்டத்தின் போக்கை ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் மூலம் மாற்றினார்.
இதனால், போட்டி முற்றிலும் தென்னாப்பிரிக்க அணியின் பக்கம் சரிந்தது. ஒரு பக்கம் கோட்சியா அதிரடி காட்ட மறுப்பக்கம் ஸ்டப்ஸ் தேவையான நேரத்தில் பவுண்டரி அடித்தார். இருப்பினும் இந்திய அணி இறுதி வரை போராட, களத்தில் நின்ற ஸஸ்டப்ஸ் பேட்டிங்கில் அதை தவிடு போடி ஆக்கினார்.
இதனால், 3 விக்கெட் இழப்பிற்கு தென்னாபிரிக்க அணி 19 ஓவரில் 128 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி இந்திய அணிக்கு திருப்பிக் கொடுத்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி இந்த தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. இந்த தொடரின் இரு அணிகளுக்குமான அடுத்த போட்டியானது வரும் நவ.13-ம் தேதி சூப்பர்ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.