உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எங்கே எப்போது நடைபெறவுள்ளது என்பதற்கான தகவல் கிடைத்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இரு நாட்டு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டியை அகமதாபாத் மைதானத்தில் நடத்த முடிவு செய்துள்ளது.
ஏனென்றால்ம், இந்த போட்டியை பார்ப்பதற்கு வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 1 லட்சம் பேர் அமரும் திறன் கொண்ட அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் நாட்டிலேயே மிகப்பெரியது. இதனால் அங்கு போட்டி நடத்தினால் நன்றாக இருக்கும் என்பதற்காக பிசிசிஐ போட்டியை அங்கு நடத்த திட்டமிட்டுள்ளதாம்.
தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் முடிவடைந்தவுடன் உலகக் கோப்பை அட்டவணையை பிசிசிஐ பிரமாண்டமாக வெளியிடும் எனத் தெரிகிறது. அதனை வைத்து பார்த்தால் போட்டி அக்டோபர் 7ஆம் தேதி நடைபெறும் என தெரிகிறது.
மேலும், அக்டோபர்-நவம்பர் மழைக்காலமாக இருப்பதால், நவம்பர் முதல் வாரத்திற்கு முன்னதாக நாட்டின் தெற்கு பகுதிகளில் போட்டிகளை முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி…
மதுரை : மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விரிவாக்க…
சென்னை : தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (17ம் தேதி) சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்…
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…