India vs Pakistan Live Score: அடுத்தடுத்து சிக்ஸர் அடித்த இப்திகார் போய்ட்டுவாங்கனு சொல்லி அனுப்பிய ஷமி
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதினாலே அது தீபாவளிதான்.அதிலும் , உலகக்கோப்பை டி 20 என்றால் சொல்லவா வேண்டும் ?. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றே தீபாவளி தொடங்கும்.
டாஸ் வென்று இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்ததது. ரிஸ்வான் , பாபர் ஆகியோர் பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.இந்தியா சார்பாக புனவேஷ்னர் பந்துவீச்சை தொடங்கினர். சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றியது.
ரிஸ்வான், பாபர் என தொடக்க வீரர்கள் இருவரும் அர்ஷ்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.நிதானமாக சென்று கொண்டிருந்த ஆட்டத்தை இப்திகார் அகமது அடுத்தடுத்து அடித்த சிக்ஸரால் பதற்றம் தொற்றிக்கொண்ட நிலையில் ஷமி வீசிய பதில் lbw விக்கெட்டாகி 51 ரன்களில் வெளியே சென்றார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய ஷதாப் கான் 5 ரன்களுக்கும்,ஹைதர் அலி 2 ரன்னுக்கும் ஹர்திக் பாண்டியாவிடம் விக்கெட்டை இழந்தனர்.
14 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 98 ஒன்றுக்கு 5 விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது.
இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளன. இந்திய அணியில் ரோகித் சர்மா , ராகுல் , சூர்யகுமார் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர்.கோலியும் பார்முக்கு திரும்பியுள்ள , பாண்டியாவின் ஆட்டம் கூடுதல் பலம்.பந்துவீச்சில் பும்ரா இல்லாத நிலையில், ஷமி ஆறுதல் அளிக்கிறார்.
மழை குறுக்கிடாமல் இருந்தால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்திய அணி :ரோகித் சர்மா (கேட்ச்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (வி.கே), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்
பாகிஸ்தான் அணி : பாபர் ஆசாம் (கேட்ச்), முகமது ரிஸ்வான் (வி.கே), ஷான் மசூத், ஷதாப் கான், ஹைதர் அலி, இப்திகார் அகமது, முகமது நவாஸ், ஆசிப் அலி, ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்