IND vs NZ : மீண்டும் போட்டியில் குறுக்கிட்ட மழை! ‘வெதர்மேன் சொன்னது நடந்துரும் போலே’?
இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த டெஸ்ட் போட்டி மீண்டும் மழையால் தடைபட்டுள்ளது.
பெங்களூரு : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற வந்த முதல் டெஸ்ட் போட்டியின் இன்றைய 4-ஆம் நாள் ஆட்டம் மழையால் தடைபட்டுள்ளது. இதற்கு முன், இந்த போட்டியின் முதல் நாளில் மழை பெய்ததால் அன்றைய தினம் கைவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அடுத்த நாளான 2-ஆம் நாள் தான் போட்டியானது தொடங்கியது. அன்றைய தினம் இந்திய அணி மிக மோசமாக பேட்டிங் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின், நேற்றைய நாள் அதிலிருந்து மீண்டு வந்த இந்திய அணி பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி அந்த மோசமான விளையாட்டை இதன் மூலம் சமன் செய்ய முற்பட்டனர்.
இதன் மூலம், வலுவான நியூசிலாந்து அணியின் ஸ்கோரை விட முன்னிலை பெறுவதற்கு கடினமாக போராடினார்கள். அதன் விளைவாக நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி சர்ஃபராஸ் கான், ஆகியோர் அரை சதம் கடந்து நல்ல ஒரு தொடக்கத்தை இந்திய அணிக்கு கொடுத்தனர்.
அதன்பின், இன்றைய தொடங்கிய 4-ஆம் நாள் ஆட்டத்தில் களத்தில் விளையாடி கொண்டிருந்த ரிஷப் பண்ட் பரிசாகும் கடந்தார் அதன் பின் சர்ஃபராஸ் கான் தனது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இது அவரது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியின் சதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம், பண்ட் 54 ரன்களுடனும், சர்ஃபராஸ் கான் 125 ரன்களுடனும் எடுத்து களத்தில் விளையாடி வருகின்றனர். மேலும், இந்திய அணி 344 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 12 ரன்கள் பின்னிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், மழை பெய்ததால் போட்டியானது நிறுத்தப்பட்டது.
முன்னதாக இன்று காலை தமிழ்நாடு வெதர்மேன் இன்று பெங்களுருவில் நடைபெற்று வரும் இந்திய நியூஸிலாந்து டெஸ்ட் போட்டி மழையால் நடைபெறாது என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது,அதே போல மழையால் போட்டியானது தடைபட்டுள்ளது.
பெய்து வரும் மழை இன்றைய நாள் தொடருமா? அல்லது மழை நின்ற பிறகு போட்டியானது தொடங்குமா? எனபதை பொறுத்து இருந்தே பார்க்கவேண்டும். இந்த போட்டி டிராவானால் இரு அணிகளுக்கும் டெஸ்ட் உலகக்கோப்பை இறுதிக்கு போட்டி முன்னேறுவதற்கு சற்று பின்னடைவாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.