IND vs NZ : மோசமாக விளையாடும் இந்திய அணி! இங்கிருந்து வெற்றி பெற முடியுமா?
நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ்க்கு போராடி 156 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது.
புனே : இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் இன்னிங்ஸ்க்கு சிறப்பான பேட்டிங் அமைத்த நியூஸிலாந்து அணி 259 ரன்கள் சேர்த்தது. அதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியோ நியூஸிலாந்து அணியின் வீரராக சாண்ட்னர் சுழலில் சிக்கி சின்னாபின்னமானது.
இதன் காரணமாக இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸ்க்கு வெறும் 156 ரன்களுக்கே சுருண்டது. இதனால், இந்த போட்டியின் வெற்றி இந்திய அணிக்கு தற்போது கேள்விக் குறியாகி இருக்கிறது. மேலும், நியூஸிலாந்து அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாகவே விளையாடி வருகிறது. இதனால், இந்திய அணியை விட 250 ரன்கள் முன்னிலையில் விளையாடி வருகிறது.
ஒருவேளை, நியூஸிலாந்து அணி இந்த நாளை கடந்து நாளையும் பேட்டிங்கை தொடர்ந்து அதிக ரன்கள் முன்னிலை பெற்றால். உதாரணமாக, இன்றும் நாளையும் சேர்த்து பேட்டிங் செய்து நியூஸிலாந்து அணி 500 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றால் இந்திய அணி இந்த போட்டியில் வெல்வது சந்தேகம் தான்.
இதனால், இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு இந்திய அணிக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு நியூஸிலாந்து அணியை 300 ரன்களுக்கு மேல் முன்னிலை பெறவிடாமல் தடுக்க வேண்டும். ஏன் என்றால் 300 ரன்களை கடந்து விட்டால் இலக்கை அடைவதற்கு இந்திய அணிக்குக் கடினமாகவே அமைந்து விடும்.
அதற்குக் காரணம், மிட்செல் சாண்ட்னரும், கிளென் பிலிப்ஸ்ஸும் தான். கடந்த இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ்க்கு கடினமாய் அமைந்தது இவர்களின் பந்து வீச்சு தான். மேலும், ஆட்டம் போக போக மைதானம் ஸ்பின் பலர்களுக்கு ஏற்றவரே முற்றிலும் மாறிவருகிறது.
இதனால், இந்திய அணி இன்றைக்குள் நியூஸிலாந்து அணியை 200 ரன்களை தொடவிடாமல் பொட்டலம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே இந்திய அணிக்கு வெற்றியின் வாய்ப்பு சற்று அதிகரிக்கும் என கருதப்படுகிறது.