IND vs NZ ODI: இறுதிவரை போராடிய வாஷிங்டன்! இந்தியா 219 ரன்களுக்கு ஆல் அவுட்.!
நியூசிலாந்துக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 219 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டித்தொடர்களில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற நிலையில் முன்னிலை வகிக்க இரண்டாவது போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், ஷிகர் தவான்(28),கில்(13), என ஓப்பனிங் வீரர்கள் சொதப்ப, அதன் பின் களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் ஓரளவு ரன்கள்(49) குவித்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார்(6) ரன்களுக்கும், ரிஷப் பந்த்(10), தீபக் ஹூடா(12) என நியூசிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வந்த வேகத்தில் திரும்பினர். வாஷிங்டன் சுந்தர் மட்டும் தனியாக நிலைத்து நின்று அரைசதம் அடித்து இந்தியா, 200 ரன்களைக் கடக்க போராடினார்.
முடிவில் இந்திய அணி, 47.3 ஓவர்களில் 219 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கடைசி வரை போராடிய வாஷிங்டன் சுந்தர், 51 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து தரப்பில் ஆடம் மில்னே, டேரில் மிட்சேல் தலா 3 விக்கெட்களும், டிம் சவுதி 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.