IND vs NZ ODI: ஷ்ரேயஸ் ஐயர், தவான் அதிரடி! இந்தியா 306 ரன்கள் குவிப்பு.!

Default Image

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 306/7 ரன்கள் குவிப்பு.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக இன்று முதல் ஒருநாள் போட்டியில் ஆக்லாந்தில் விளையாடுகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தவான், சுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரின் அரைசதத்தால் இந்திய அணி 300 ரன்களைக்கடந்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் குவித்துள்ளது.

அதிகபட்சமாக இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர் 80, தவான் 72, சுப்மன் கில் 50, சாம்சன் 36, வாஷிங்டன் சுந்தர் 37* ரன்கள் குவித்து இந்திய அணி 300 ரன்களைக் கடக்க வித்திட்டனர். நியூசிலாந்து சார்பில் டிம் சவுதி மற்றும் பெர்குசன் தலா 3 விக்கெட்களும் வீழ்த்தினர். நியூசிலாந்து அணிக்கு 307 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்