IND VS NZ கடைசி போட்டியில் நியூ..,வெற்றியை இந்தியாவிற்கு வசப்படுத்திய வசீகரன்..!

Published by
kavitha

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான  கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்கிறது.5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இன்று  கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்நிலையில் நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மளமளவென இந்திய விக்கெட்டுகள் அனைத்தும் சரிந்தன. 18 ரன் எடுப்பதற்குள் இந்திய அணி  4 விக்கெட்டை இழந்து தவித்தது.

ரோகித்சர்மா 2 ரன்னிலும், சுப்மன் ஹில் 7 ரன்னிலும் ஹென்றி பந்தில் ஆட்டம் இழந்தனர். தவான் 6 ரன் மற்றும்  டோனி 1 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி தந்த நிலையில் 5வது விக்கெட்டான அம்பதிராயுடு மற்றும்  விஜய் சங்கர் ஜோடி விக்கெட் சரிவை  சற்று தடுத்து நிறுத்தியது என்றே சொல்லலாம்.இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிதானமாக ஆடிய நிலையில்  29வது ஓவரில் இந்தியா 100 ரன்னை தொட முடிந்தது.

இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறக்கப்பட்ட தமிழக வீரர் விஜய் சங்கர்அரை சதத்தை எடுப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 64 பந்தில் 4 பவுண்டரியுடன் 45 ரன்களை எடுத்து  துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார்.

இறுதியில் 49. 5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது.  இதில் அதிகபட்சமாக அம்பதிராயுடு 90 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார்.மறுபுறம்    விஜய் சங்கரும்- ஹர்திக் பாண்டியாவும் தலா 45 ரன்களை எடுத்து.ஸ்கோரை உயர்த்திய நிலையில்  ஹர்திக் 22 பந்துகளில்  45  ரன்கள் எடுத்தார்.நியூசிலாந்து அணியில்  அபாரமாக பந்து வீசிய  மேட் ஹென்றி 4, பவுல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

253 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கிய தொடக்க வீரர்களான கொலின் முன்ரோ (24) மற்றும்  நிக்கோல்ஸ் (8) ஆகியோரை முகமது ஷமி தனது அதிரடியால் வெளியேற்றி நியூசிலாந்து அணிக்கு தொடத்திலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும் ராஸ் டெய்லர் 1 ரன் எடுத்த இருந்த போது  ஹர்திக் பாண்டியாவின்  பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன் பின் 4வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் டாம் லாதம் ஜோடி சேர்ந்தது விளையாடினர்  இந்த ஜோடி மிகவும் நிதானமாக விளையாடியது.

இதில் மறுபக்கம் நீஷம் அதிரடியாக விளையாடி இந்தியாவை கொஞ்சம்  அச்சுறுத்தினார். 32 பந்தில் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு சமமாக இருந்த போது சுதாரித்து கொண்ட தோனி கச்சிதமான தருணத்தில் அற்புதமான வகையில் நீஷம்-யை ரன் அவுட் ஆக்கினார்.

அத்துடன் நியூசிலாந்தின் தோல்வி படு உறுதியானது.இந்நிலையில் தோனியின் கச்சிதமான இந்த  விக்கெட் இந்திய வெற்றியை பிரகாசமாக மிளிரவைத்தது என்றே சொல்லவேண்டும் இதன் பின் வெற்றி இந்தியா வசம் திரும்பியது.

இதன் பின்  நியூசிலாந்து 44.1 ஓவரில் ஆல்அவுட்டாகி 217 ரன்கள் எடுத்து தோல்வியை அடைந்தது. இதனால் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 4-1  என்று கைப்பற்றியது.

இந்திய வெற்றிக்கு வித்திட்ட பந்து வீச்சாளர்கள் சாஹல் 3 விக்கெட் மற்றும் முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Published by
kavitha

Recent Posts

மக்களே வாரங்களா..? இல்லை வர வைக்கிறீகளா? – திமுகவை விமர்சித்த சீமான்!

திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…

3 seconds ago

“பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி”… அதிமுகவுடன் கூட்டணியா? தவெக விளக்கம்!

சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…

8 mins ago

குஜராத்தில் நடந்த ராகிங் கொடுமை! மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

தார்பூரி : குஜராத் பதான் மாவட்டம் தார்பூரில் அமைந்துள்ள ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுரேந்திரநகரைச் சேர்ந்த அனில்…

37 mins ago

பிறந்தநாள் அதுவுமா மிரட்டலான லுக்.. ‘ராக்காயி’- யாக களமிறங்கிய நயன்தாரா.!

சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…

1 hour ago

பல பஞ்சாயத்துக்கு மத்தியில் வெளியான நயன்தாராவின் ஆவணப்படம்.!

சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…

2 hours ago

இலங்கையின் புதிய பிரதமராக ‘ஹரிணி அமரசூரிய’ பதவியேற்றார்!

கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…

2 hours ago