IND vs NZ : இந்திய அணியில் இடம்பெறாத முகமது ஷமி! காரணம் என்ன?
இந்தியா மற்றும் நியூஸி. அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரானது இந்திய அணிக்கு மிகமுக்கிய தொடராக அமைந்துள்ளது.
பெங்களூரு : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அடுத்த கட்டமாக இந்திய அணியும், நியூஸிலாந்து அணியும் 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது.
அதில், வேக பந்து வீச்சாளரான முகமது ஷமி அணியில் இடம்பெறவில்லை. மேலும், அவரும் சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இந்திய அணிக்கு முக்கியமானத் தொடராகக் கருதப்படும் நியூஸிலாந்துத் தொடரில் இவர் இடம் பெறாதது குறித்து ரசிகர்கள் பிசிசிஐயிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் , அவர் ஏன் அணியில் இடம்பெறவில்லை என்பதற்கான காரணத்தை ஒரு தரப்பு ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த காரணங்கள் என்னவென்று நாம் தற்போது பார்க்கலாம்.
ரசிகர்கள் கூறும் காரணம் :
- முதலில் நடைபெறும் போட்டியானது இந்தியா என்பதால், இங்கு அதிகம் ஸ்பின் பவுலிங்கிற்கே பிட்ச் சாதகமாக அமையும். இதனால் தான் கடந்த வங்கதேச போட்டியில் கூட அஸ்வின், ஜடேஜா, அக்சர் மற்றும் குலதீப் என அனைத்து ஸ்பின் பட்டாளத்தையும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா களமிறக்கி இருந்தார்.
- மேலும், யாஷ் தயாள் போன்ற வேக பந்து வீச்சாளரை அணியில் வைத்திருந்தாலும். அதிகாமாக ரோஹித் சர்மா ஸ்பின் பவுலிங்கை சார்ந்தே இருந்தார். இதனால் , நடைபெற போகும் நியூஸி. தொடரிலும் ஸ்பின் பவுலிங் கைகொடுக்கலாம் எனக் கருதி ஷமியை எடுக்காமல் இருந்திருக்கலாம்.
- இவை அனைத்தையும் தாண்டி இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் பார்டர் கவாஸ்கர் தொடர் நடைபெற உள்ளது. இந்திய அணிக்கு இது மிகமுக்கியமான தொடர் என்பதால் அந்த தொடரில் முகமது ஷமி விளையாடவேண்டும். மேலும், அந்த டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவது ஆஸ்திரேலியா மைதானம் என்பதால் வேக பந்து வீச்சாளர்களுக்கு அதிக அளவு கைகொடுக்கும். இதனால், முகமது ஷமி இடையில் விளையாடி மீண்டும் காயம் ஏற்பட்டால் அது ஆஸ்திரேலியாவுடனான தொடரில் பாதிப்பு என்பதால் கூட ஷமியை நியூஸி. தொடரில் எடுக்காமல் இருந்துருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.