இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையே 5 ஒருநாள் போட்டியில் 4-1 என்ற கணக்கில் தொடரை வாரி சுருட்டியது இந்தியா.இதில் தோனியின் விக்கெட் திருப்புமுனையாக இந்திய அணியின் வெற்றிக்கு அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
முதல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி நியூ..,அதிர்த்தி கொடுத்த நிலையும் அந்த அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக நீஷம் விளையாடினார்.
இவரின் அதிரடியால் வெற்றி நியூ.,பக்கம் தான் நகர்ந்தது.இந்நிலையில் 37வது ஓவரின் 2வது பந்தை கேதர் ஜாதவ் வீச இதனை எதிர்கொண்ட நீஷம் நன்றாகக் காலை நீட்டி ஸ்வீப் ஆட முயன்ற போது பந்து சிக்கவில்லை, பேடில் பட்டு பந்து பின்னால் தோனியிடம் சென்று விடவே இதனை அடுத்து ஜாதவ் எல்.பி.முறையீடுகேட்க ஆனால் அது ஸ்டம்ப் லைனுக்கு வெளியே காலில் வாங்கிய பந்து என்று கூறப்பட்டது இதனால் இது எல்.பி.கிடையாது. என்றதும் பெருமூச்சு விடும்
நேரத்தில் ஜேம்ஸ் நீஷம்மை பந்து விலகி சென்ற பந்து தோனியிடம் சிக்கியதை அறியாமல் கிரீசுக்கு வெளியே இருந்தார்.இதை கவனித்த தோனி சற்றும் தாமதிக்காமல் பந்தை அண்டர் ஆர்ம் த்ரோ செய்து ஸ்டம்ப்பை ஒரு பதம் பார்க்க, 44 ரன்களில் நீஷம் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.இந்த ரன் அவுட்டை செய்து செய்துவிட்டு தோணி ஒரு குழந்தைப் போல துள்ளிக் குதித்து விக்கெட்டை கொண்டாடினார்.
இதற்கு பின் விக்கெட்டுகள் மளமளவென விழவே நியூ..,217 ரன்களில் சுருட்டி கோப்பையை இந்தியா கைப்பற்றியது.இந்த வீடியோ ஆனது ரசிகர்களால் இதுக்கு தான் தலைவன் வேணும்றது என்பது போல் வைரலாகி வருகிறது
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…