நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்கிறது.5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
கடைசி போட்டிக்கான இந்திய அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டது.காயத்தில் இருந்து குணம் அடைந்ததால் தோனி தேர்வு செய்யப்பட்டார். இதே போல முகமதுஷமி, விஜய்சங்கர் ஆகியோரும் போட்டிக்கான அணியில் இடம் பெற்றனர்.மற்றும் முந்தைய தினேஷ்கார்த்திக் மற்றும் குல்தீப்யாதவ், கலீல் அகமது ஆகியோர் கழற்றிவிடப்பட்டனர்.
இந்நிலையில் இன்று கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்நிலையில் நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மளமளவென இந்திய விக்கெட்டுகள் அனைத்தும் சரிந்தன. 18 ரன் எடுப்பதற்குள் இந்திய அணி 4 விக்கெட்டை இழந்து தவித்தது.
ரோகித்சர்மா 2 ரன்னிலும், சுப்மன் ஹில் 7 ரன்னிலும் ஹென்றி பந்தில் ஆட்டம் இழந்தனர். தவான் 6 ரன் மற்றும் டோனி 1 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி தந்த நிலையில் 5வது விக்கெட்டான அம்பதிராயுடு மற்றும் விஜய் சங்கர் ஜோடி விக்கெட் சரிவை சற்று தடுத்து நிறுத்தியது என்றே சொல்லலாம்.இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிதானமாக ஆடிய நிலையில் 29வது ஓவரில் இந்தியா 100 ரன்னை தொட முடிந்தது.
இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறக்கப்பட்ட தமிழக வீரர் விஜய் சங்கர்அரை சதத்தை எடுப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 64 பந்தில் 4 பவுண்டரியுடன் 45 ரன்களை எடுத்து துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார்.
இறுதியில் 49. 5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக அம்பதிராயுடு 90 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார்.மறுபுறம் விஜய் சங்கரும்- ஹர்திக் பாண்டியாவும் தலா 45 ரன்களை எடுத்து.ஸ்கோரை உயர்த்திய நிலையில் ஹர்திக் 22 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.நியூசிலாந்து அணியில் அபாரமாக பந்து வீசிய மேட் ஹென்றி 4, பவுல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.தர்போது நியூசிலாந்து விளையாடி வருகிறது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…