IND vs NZ : தொடங்கியது முதல் டெஸ்ட் போட்டி! பேட்டிங் களமிறங்கும் இந்திய அணி! மாற்றங்கள் என்னென்ன?
இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
பெங்களூர் : நேற்று தொடங்கவேண்டிய இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியானது பெய்து வந்த மழையின் காரணமாக நடைபெறாமல் போனது. அதனால், நாளை அதாவது இன்று இந்த போட்டியானது நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.
அந்த டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, முதலில் பேட்டிங் செய்கிறோம் என தெரிவித்தார். அதன்படி, தற்போது இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மாவும், ஜெய்ஸ்வாலும் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
இந்திய அணியின் மாற்றம் :
முன்னதாக, இளம் வீரர் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் எனும் ஒரு தகவல் வெளியாகி இருந்தது. அதனை ரோஹித் சர்மா இன்று உறுதி செய்துள்ளார். மேலும், இந்த முதல் டெஸ்ட் போட்டியில் கில்லுக்கு பதிலாக மற்றொரு இளம் வீரரான சர்ஃப்ரஸ் கான் விளையாடுவார் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
மற்றபடி இந்திய அணியில் எந்த ஒரு மாற்றமுமின்றி கடந்த வங்கதேச டெஸ்ட் தொடரில் எந்த அணி களமிறங்கியதோ அதே அணி இந்த முதல் போட்டியிலும் களமிறங்கி இருக்கிறது.
நியூஸிலாந்து அணியின் மாற்றம் :
நியூஸிலாந்து அணியிலும், முன்னதாக அறிவித்ததை போல இந்த முதல் போட்டியில் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக வில் யங் களமிறங்கி விளையாடி வருகிறார். மற்றபடி, எந்த ஒரு மாற்றத்தையும் நியூஸிலாந்து அணியும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாடி வரும் இந்திய அணி வீரர்கள் :
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், விராட் கோலி, சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
விளையாடி வரும் நியூஸிலாந்து அணி வீரர்கள் :
டாம் லாதம் (கேப்டன்), டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல் (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மாட் ஹென்றி, டிம் சவுத்தி, அஜாஸ் படேல், வில்லியம் ஓர்ர்கே.