IND vs NZ : தொடரும் தோல்வி! இந்தியாவை வொயிட்-வாஷ் செய்த நியூசிலாந்து அணி!
நடைபெற்ற 3 வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

மும்பை : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி ஏற்கனவே கைப்பற்றியது. இந்த நிலையில், 3 வது டெஸ்ட் போட்டியானது நேற்று முன்தினம் அதாவது நவம்பர் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இந்த போட்டியில் தொடக்கத்தில் நியூசிலாந்தின் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸ்க்கு 235 ரன்கள் சேர்த்தது. அதன்பின், இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் வெறும் 174 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த ஸ்கோரையும் இந்தியா அணி தடுமாறியே சேர்த்தது. அதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி திறம்பட விளையாடி ரன் சேர்த்தது. ஆனால், இந்திய அணியின் அபார பந்து வீச்சால் நியூசிலாந்து அணி ஒரு கட்டத்திற்கு மேல் திணறியது.
இதன் காரணமாக, இரண்டாவது இன்னிங்சில் 263 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிலும், ஜடேஜா 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். அந்த நிலையில், நியூசிலாந்து அணி இந்தியை விட 145 முன்னிலையில் இருந்தது. இதனால், இந்தியா அணிக்கு 146 ரன்கள் என்ற எளிய இலக்கே நிர்ணயமானது.
இந்த எளிய இலக்கை இந்தியா அணி எளிதில் எட்டி விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியா அணியின் பேட்ஸ்மென்கள் சொதப்பினர். அதிலும், அஜாஸ் பட்டேலின் அபாரமான பவுலிங் இந்தியா அணியை கதிகலங்க வைத்தது. ஆனாலும், ரிஷப் பண்ட் ஒரு முனையில் விளையாடி அரை சதம் அடித்தார்.
இருந்தாலும் அது இந்தியா அணிக்கு கை கொடுக்க வில்லை. இதன் காரணமாக, 121 ரன்களுக்கு இந்தியா அணி ஆல்- அவுட்டானது. இதனால், விறுவிறுப்பாக சென்ற போட்டியில் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றனர்.
மேலும், 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் 3-0 என நியூசிலாந்து அணி இந்தியாவை தனது சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாறு சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025