IND vs NZ: நடப்பு ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டியானது அரைஇறுதியை எட்டியுள்ளது. இந்தியாவில் டெல்லி, சென்னை, புனே, அகமதாபாத் என பல இடங்களில் நடைபெறும் இந்த தொடரில் மொத்தமாக 45 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 2 அரையிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 4 அணிகளை தவிர மற்ற 6 அணிகளும் தொடரை விட்டு வெளியேறுள்ளது. தற்போது புள்ளிவிவரப்பட்டியலில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி அபாரமாக விளையாடி, ஒரு போட்டியில் கூடத் தோல்வியை சந்திக்காமல் 18 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இதற்கு அடுத்ததாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முறையே 14 புள்ளிகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. நியூசிலாந்து அணியானது 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் முதல் அரையிறுதி போட்டியானது நாளை (15.11.2023) மதியம் 2 மணியளவில் நடைபெறுகிறது.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், லீக் போட்டியில் தோல்வியை சந்திக்காத இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் நேருக்கு நேர் மோதுகிறது. கடந்த 2019 உலகக்கோப்பையில் இருந்தே இந்த இரு அணிகளுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. ஏனென்றால் அந்த தொடரிலும் இதே போல நடந்த முதல் அரையிறுதி நாக்அவுட் சுற்றில் இந்தியாவும், நியூசிலாந்தும் விளையாடியது.
அதில் நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதே போல இந்த போட்டியிலும் வெற்றி பெறலாம் என்ற முனைப்பில் நாளை விளையாடவுள்ளது. ஆனால் கடந்த உலகக்கோப்பையைக் காட்டிலும் இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் அபாரமாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக கேப்டன் ரோஹித், விராட் கோலி, சுப்மன் கில், கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
இவர்களின் அற்புதமான ஆட்டத்தாலும், ஒற்றுமையினாலும் இந்தியா ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்கவில்லை. இதனால் இந்தியாவை எதிர்கொள்வது நியூசிலாந்துக்கு இந்த முறை கடினமாக இருக்கும். இந்த இரு அணிகளும் இதுவரை 117 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 59 முறை இந்தியாவும், 50 முறை நியூஸிலாந்தும் வெற்றி பெற்றுள்ளது. 10 போட்டிகள் முடிவுகள் இல்லாமல் முடிந்துள்ளன.
அதேபோல ஒருநாள் உலகக்கோப்பையில் 10 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. அதில் வியக்கத்தக்க வகையில் 5 முறை நியூசிலாந்து அணி வென்றுள்ளது. இந்தியா 4 போட்டிகளில் வென்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் உள்ளது. நாளைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் நியூசிலாந்தின் இந்த சாதனையை சமன் செய்யும். மேலும் இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுவதால் இந்தியா அணிக்கு சாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…