இந்தியாவின் முக்கிய விக்கெட்டுகளை சாய்த்த நியூ..!253 ரன்களில் சுருட்டி இலக்கு நிர்ணயித்தது ..!
நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்கிறது.5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இன்று கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்நிலையில் நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மளமளவென இந்திய விக்கெட்டுகள் அனைத்தும் சரிந்தன. 18 ரன் எடுப்பதற்குள் இந்திய அணி 4 விக்கெட்டை இழந்து தவித்தது.இறுதியில் 49. 5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியாவை 252 ரன்களில் சுருட்டியது.இதில் அதிகபட்சமாக அம்பதிராயுடு 90 ரன்களும் , விஜய் சங்கரும் ஹர்திக் பாண்டியா இருவரும் தலா 45 ரன்களும் எடுத்துள்ளனர். இதனால் நியூசிலாந்துக்கு 253 ரன்களை இலக்காக இந்தியா நிர்ணாயித்துள்ளது.