இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, முதலில் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. தற்பொழுது 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முத்ல் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனைதொடர்ந்து இரண்டாம் ஒருநாள் போட்டி, இன்று புனேவில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றிவிடும். அதேபோல இங்கிலாந்து அணி, டெஸ்ட், டி-20 தொடரை இழந்ததால், ஒருநாள் தொடரை இழக்காமல் இருக்க இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்புகள், ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
முதல் போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக க்ருனால் பாண்டியா, அறிமுகமான முதல் போட்டியில் விரைவாக அரைசதம் விளாசி அசத்தினார். பிரசித் கிருஷ்ணாவும் புதிய சாதனை படைத்தார். காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் விலகியதால், அவருக்கு பதில் சூரியகுமார் யாதவ் களமிறக்கிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணியை பொறுத்தளவில் ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், மார்கன், பட்லர், மார்க் வுட், ஆதில் ரஷீத், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனால் மார்கனுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது. இன்றைய போட்டி, இரு அணிகளின் வெற்றிகளை தீர்மானிப்பதால், இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…