INDvENG: பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறுமா இந்தியா??

Default Image

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஆம் டெஸ்ட் போட்டி, இன்று அஹமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் மைதானத்தில் பகல் – இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்று முடிந்தது. டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டி, இன்று அஹமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் மைதானத்தில் பகல் – இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்க இந்த டெஸ்ட் போட்டி முக்கியமானதாக கருதப்படுவதால், இரு அணிகளும் தீவிரமாக பயிர்ச்சி பெற்று வருகிறது. இந்த புதிய சர்தார் பட்டேல் கொண்டுள்ளது. இது புதிய மைதானம் என்பதால், பிட்ச் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. மேலும், இந்த பகல் – இரவு டெஸ்ட் போட்டியை விளையாட இந்திய அணி சற்று தயக்கம் காட்டுகிறது.

முதல் பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆனால் இரண்டாவது ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது. கடந்த டிசம்பர் மாதம், ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் இந்திய அணி, 21.2 ஓவர்களில் வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதல்வியை சந்தித்தது.

அதேபோல இங்கிலாந்து அணி, இதுவரை 3 பகல்-இரவு டெஸ்டில் விளையாடியது. அதில் ஒரு போட்டியில் வெற்றியும், மற்ற இடந்து போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. மேலும், 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ள நிலையில், இந்த போட்டிக்கான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துக்கொண்டே வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்