முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் , 2-வது இன்னிங்சில் சதம் ! அசத்தும் அஸ்வின்

சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் சதம் விளாசினார் அஷ்வின்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி, சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 329 ரன்கள் எடுத்திருந்தது.பின்னர் முதல் இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு சுருண்டது.சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதனால் இந்திய அணி 195 ரன்கள் முன்னிலையில் பெற்று, நேற்று தனது 2-வது இன்னிங்சை இந்திய அணி தொடங்கியது.
தொடர்ந்து இன்றும் இந்திய அணி பேட்டிங் செய்து வரும் நிலையில் இந்திய வீரர் அஸ்வின் 134 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டரிகள், 1 சிக்ஸ் அடித்து சதம் அடித்துள்ளார்.இங்கிலாந்து எதிரான முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் 2வது இன்னிங்சில் சதம் விளாசியுள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினின் 5-வது சதம் இதுவாகும். தற்போது வரை இந்திய அணி 83 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் அஸ்வின் 109 ரன்களுடனும் ,சிராஜ் 9 ரன்களுடனும் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025