IND vs BAN: பண்ட் வெளியே கேஎல் ராகுல் உள்ளே… பிளேயிங் லெவன் இதோ.!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில், துபாயில் இன்று நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது போட்டி இன்று, இந்திய அணி தனது முதல் போட்டியை தொடங்குகிறது. இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி, இந்தப் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த மைதானத்தில் 2018 ஆசியக்கோப்பை நடைபெற்றது. இதில், இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளில், 5ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. அதே வெற்றி ரெக்கார்டை இந்திய அணி தொடருமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்பொழுது, டாஸ் வென்ற வங்கதேசம் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. மேலும், இந்திய அணி முதலில் பந்துவீசுகிறது. குறிப்பாக, இந்த போட்டியில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் களமிறங்கியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபியின் பயற்சியின் போது, ரிஷப் பண்டுக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
துபாய் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட்டைப் பொறுத்தவரை, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இங்கு உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்லைல், பந்துவீச காத்திருக்கும் இந்திய அணிக்கு இந்த மைதானம் சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது இரு அணிகளிலும் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
இதுவரை நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரு அணிகளும் இதுவரை 41 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 32 போட்டிகளில் இந்தியாவும், 8 போட்டிகளில் வங்கதேசமும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவில்லாமல் கைவிடப்பட்டது. இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியை இந்தியா வீழ்த்துமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
இரு அணிகள் சார்பாக விளையாட விருக்கும் வீர்களின் பட்டியல்…
இந்தியா அணி:
கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பங்களாதேஷ் அணி:
கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாந்தோ தலைமையிலான அணியில், தன்சித் ஹசன், சௌமியா சர்க்கார், தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், ஜாக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.