IND vs BAN : ஒரு பக்கம் ‘சேட்டன்’..மறுபக்கம் ‘கேப்டன்’..! 20 ஓவர் 297 ரன்கள்.. பொளந்து கட்டிய இந்திய அணி!
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 297 என்ற இமாலய ரன்களை எடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் உலகசாதனைப் படைத்துள்ளது.
ஹைதராபாத் : இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி, தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர்கள். முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய சேட்டன் ‘சஞ்சு சாம்சன்’ ஒரு பந்தை கூட டிஃபன்ஸ் செய்யாமல் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடித்து வங்கதேச பவுலர்களை துவம்சம் செய்தார்.
ஆனால், மறுமுனையில் களமிறங்கிய அபிஷேக் சர்மா துரதிஷ்டவசமாக அவுட்டாக அடுத்ததாக சூரியகுமார் யாதவ் களமிறங்கினார். 3-வது விக்கெட்டுக்கு கூட்டு சேர்ந்த இருவரும் மைதானத்தில் அனைத்து பக்கங்களிலும் சிக்ஸர் மழையை பொழிந்தனர்.
வங்கதேச அணி வீரர்களுக்கு மிக சவாலாக மாறிய இருவரும் வாணவேடிக்கையை நிறுத்தாமல் அதிரடியின் உச்சத்தில் விளைய்டினார்கள். இருவரும் இணைந்து 2-வது விக்கெட் பட்னர்ஷிப்புக்கு 173 ரன்கள் எடுத்தனர். இது இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் ஒட்டுமொத்தமாக 3-வது பெரிய ஸ்கோர் ஆகும்.
மேலும், 8 ஓவர்களிலேயே இந்திய அணி 100 ரன்களைக் கடந்து அசத்தியது. வாணவேடிக்கை நடத்திய சேட்டன் சஞ்சு 43 பந்துக்கு 111 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அவருடன் அதிரடி காட்டிய சுரிகுமார் யாதவ் 35 பந்துக்கு 75 ரன்கள் எடுத்து அசத்தினார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவும், ரியான் பராக்கும் மேற்கொண்டு மைதானத்தில் வாணவேடிக்கை நடத்தினார்கள். இந்திய அணியின் ஸ்கோர் இதனால், 16 ஓவர்களில் இந்திய அணி 234 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின் அங்கிருந்து ஹர்திக் பாண்டியவும், ரியான் பராக்கும் மேலும் பவுண்டரிகள் விளாச இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்து கொண்டே போனது. பின் 47 ரன்களில் பாண்டியாவும், 34 ரன்களில் பராக்கும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு ரிங்கு சிங் களமிறங்கி, பவுண்டரிகள் அடிக்க முயற்சித்து கடைசி பணத்திற்கு ஒரு சிக்ஸர் அடித்தார்.
300 ரன்களை இந்திய அணி தொட்டுவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த போது அது ஜஸ்ட் மிஸ்ஸில் தவறி போனது. இதனால், 20 ஓவர்களில் 297 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை இந்திய அணி எடுத்தது. இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் 2-வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
இந்த பட்டியலில் நேபாள அணி மங்கோலியாவிற்கு எதிராக 314 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த முதல் இன்னிங்சில் மட்டும் இந்திய அணி 22 சிக்ஸர்கள் அடித்துள்ளது. அதன் பிறகு, 298 என்ற வான் அளவு ஸ்கோரை எடுப்பதற்கு வங்கதேச அணி வீரர்கள் பேட்டிங் களமிறங்கினர்கள்.
முடிந்த அளவுக்கு அதிரடியாக விளையாடலாம் என நினைத்து பேட்டிங் களமிறங்கிய வங்கதேச அணி, மாயங் யாதவின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தனர். அதன்பிறகு, பவுண்டரிகள் சிக்ஸர்கள் அடித்தாலும் நிலைத்து விளையாடாமல் விக்கெட்டை இழந்து கொண்டே வந்தனர்.
ஒரு கட்டத்தில் 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய லிட்டன் தாஸ் மற்றும் டவ்ஹித் ஹ்ரிடோய் நிலைத்து விளையாட தொடங்கினார்கள். அதில், லிட்டன் தாஸ் சற்று அதிரடியாக விளையாடினார். ஆனாலும், அது வங்கதேச அணிக்கு கைகொடுக்கவில்லை.
லிட்டன் தாஸ் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் வங்கதேச அணியின் டவ்ஹித் ஹ்ரிடோய் மட்டும் நின்று தன பங்கிற்கு 63 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து எந்த ஒரு வீரரும் பெரிதளுவு ரன்கள் எடுக்கவில்லை.
இறுதியில் 20 ஓவர்கள் பிடித்த வங்கதேச அணி 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 133 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய அணியில் ரவி பிஷ்னாய் 3 விக்கெட்டும், மாயங் யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருந்தனர்.
மேலும், இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரை 3-0 என வைட்வாஷ் செய்து இந்திய அணி அசத்தி இருக்கிறது. அதன்பின் தொடர்ச்சியாக இந்த வருடத்தில் மட்டும் 22 டி20 போட்டியை இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் செய்திருக்கிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.