IND vs BAN : இந்தியா vs வங்கதேசம் மேட்ச் எப்படி இருக்கும்? பிட்ச் & வானிலை ரிப்போர்ட் இதோ…
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இதுவரை 41 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இந்திய அணி 32 முறையும், வங்கதேச அணி எட்டு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

துபாய் : பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய பரபரப்பான தொடக்க ஆட்டத்தைத் தொடர்ந்து, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-ன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது போட்டி IND vs BAN அணிகள் மீது ரசிகர்களின் கவனம் உள்ளது.
அதன்படி, இந்தியாவும் வங்கதேசமும் நாளை (பிப்ரவரி 20) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை கவரும் போட்டி என்பதை உறுதியளிக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு ஆட்டம் தொடங்கும், அதற்கு முன்னதாக, 2 மணிக்கு டாஸ் போடப்படும்.
இந்த நிலையில், நாளை நடைபெறவிருக்கும் போட்டியின் போது, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிட்ச் மற்றும் வானிலை எப்படி இருக்கும்? மழை பெய்யுமா பெய்யாதா? என்றும் அணியின் குறித்து ஒரு பார்வை பார்க்கலாம்.
இரு அணிகளும் மோதிய தருணம்
முன்னதாக, சாம்பியன்ஸ் டிராபியில் இந்த இரு அணிகளும் கடைசியாக 2017 ஆம் ஆண்டு மோதியது. இந்த இரு அணிகளும் துபாயில் இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இரண்டு முறையும் இந்திய அணி தான் வெற்றி பெற்றுள்ளது. இதை தவிர, இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான கடைசி ஐந்து ஒருநாள் போட்டிகளில், இந்தியா இரண்டில் வெற்றி பெற்றுள்ளது, வங்கதேசம் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. ஒட்டுமொத்தாமாக பார்த்தால், இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இதுவரை 41 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இந்திய அணி 32 முறையும், வங்கதேச அணி எட்டு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
பிட்ச் ரிப்போர்ட்
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ள பிட்ச் மெதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல மைதனாமாக அமையும். ESPNcricinfo தகவலின்படி, இந்த மைதானத்தில் நடந்த கடைசி 10 ஒருநாள் போட்டிகளில், ஒரு அணி ஒரு முறை மட்டுமே 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வானிலை நிலவரம்
போட்டி நடைபெறும் இடத்தில நாளை தினம் வானிலை வெப்பமாகவும் வறண்டதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகலில் மேகமூட்டத்துடன் காணப்படும் இதனால், பந்து வீச்சாளர்களுக்கு உதவும். மேலும், மாலை நேரத்தில் பேட்ஸ்மேன்களுக்கு நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணி விவரம்
வங்கதேச அணி:
கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான அணியில், ஜாகர் அலி, சௌமியா சர்க்கார், தன்சித் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, தன்சிம் ஹசன் சாகிப், நஹித் ராணா, முஸ்தாபிசுர் ரஹ்மான், தௌஹித் ஹிரிடோய், ரிஷாத் ஹொசைன், பர்வேஸ் ஹொசைன் எமோன்,
நாசும் அகமதுர் ஆகியோர் உள்ளனர்.
இந்திய அணி:
கேப்டன் ரோஹித் சர்மா லைமையிலான அணியில், கே.எல். ராகுல், ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹார்டிக் பாண்ட்யா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளனர்.