IND vs BAN : இன்று 2-வது டி20 போட்டி! அடுத்ததாக அறிமுகமாகும் இளம் வீரர் …கம்பீரின் திட்டம் இதுவா?
இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 2-வது போட்டியில் நிதிஷ் ராணா விளையாடவுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.
டெல்லி : வங்கதேச அணி இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணத்தில் நடைபெற்று வரும் டி20 தொடரின் 2-வது போட்டி இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றிருந்தது.
கம்பீரின் திட்டம் :
கம்பீரின் தலைமைப் பயிற்சியில் இந்திய அணி இந்த டி20 தொடரில் களமிறங்கியது, குறிப்பாக மாயங் யாதவ், அர்ஷதீப் சிங் மற்றும் வருண் சக்கரவர்த்தி என இந்தியாவின் இளம் வீரர்கள் கிரிக்கெட் அந்த போட்டியில் சிறப்பாக விளையாடி கிரிக்கெட் உலகில் தங்களை திரும்பிப் பார்க்கச் செய்தனர்.
எப்போதுமே இளம் வீரர்களை ஊக்குவிக்கும் கௌதம் கம்பீர், இந்த டி20 தொடரில் இளம் அணியுடன் களமிறங்கி வெற்றி வாகை சூடி வருகிறார். அதே நேரம் புதிதாக அவர் செயல்படுத்தும் இந்த இளம் வீரர்களைக் கொண்ட திட்டம் மேற்கொண்டு வெற்றியுடன் தொடருமா? என்று இன்றைய போட்டியில் தெரிந்துவிடும்.
மேலும், கடந்த போட்டியில் மாயங்க் யாதவை அறிமுகம் செய்தது போல அடுத்தபடியாக இந்தப் போட்டியில் மற்றொரு இளம் வீரரான ஹர்ஷித் ராணாவை கம்பீர் அறிமுகம் செய்ய இருக்கிறார் என ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஹர்ஷித் ராணா, நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக தனது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்.
அதே நேரம் கொல்கத்தா அணி அந்த கோப்பையை வெல்வதற்கு அவர் ஒரு முக்கிய காரணமாகவும் அமைந்திருந்தார். இதனால் தான் வங்கதேச அணியுடனான டி20 தொடர்கான இந்திய அணியை அறிவிக்கும் போது அவரது பெயரும் இடம் பெற்றிருந்தது. இதனால், புதிய முயற்சிகள் எடுக்கும் கவுதம் கம்பீர் இந்த போட்டியில் அவரை விளையாடவைக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஏற்கனவே வலுவாக இருக்கும் இந்திய அணியில் அவரும் இணைந்தால் மேற்கொண்டு வலுவாகவும் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச அணியின் மனநிலை :
இப்படி இருக்கையில், மறுபுறம் மாயக் யாதவின் வேகமான பந்து வீச்சை பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாராட்டி வந்தனர். இப்படி இருக்கையில், சமீபத்தில் வங்கதேச அணியின் கேப்டனான ஷாண்டோ, ‘மாயங்க யாதவின் பந்து வீச்சு எங்களுக்கு பெரிதளவு பாதிப்பு ஏற்படுத்தாது’ எனக் கூறியிருந்தார்.
இதன் மூலம் அந்த அணி எவ்வித கடுமையான போட்டிக்கும் தயாராகவே இருக்கின்றனர் என்பது தெரிகிறது. இதனால், வங்கதேச அணியை இந்திய அணி எளிதில் எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்திய அணி சற்று அசால்டாக இந்த போட்டியை கையாண்டாலும், வங்கதேச அணி அதைப் பிடித்துக் கொண்டு இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமுள்ளது.
இதனால் இன்று நடைபெறவிருக்கும் இந்த 2-வது டி20 போட்டிக்கு ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு என்பது இருந்து வருகிறது. இந்த போட்டியை இந்திய அணி வெற்றி பெற்றால் 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் இந்திய அணி 2-0 என இந்த தொடரையும் கைப்பற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.